பெண் குழந்தைகளுக்கு பெண் பயிற்சியாளர்களே வேண்டும் சர்வதேச கராத்தே சாம்பியன் அரசுக்கு வேண்டுகோள்
Jul 30 2025
129
தமிழனின் பாரம்பரிய கலை கராத்தே, தற்போது அந்த விளையாட்டுக்கு கலை அங்கீகாரம் இல்லாமல் போய்விட்டது. இது தமிழகத்தில் பலருக்கும் தெரியாது.
இதற்கு முக்கிய காரணம் தேசிய கராத்தே சங்கத்தின் ( KAI) தலைவர், செயலாளர் இருவரும், கோடி கணக்கில் ஊழல்கள் செய்து அந்த வழக்குகள்,கடந்த ஏழு ஆண்டுகளாக நிலுவையில் இருப்பதால் , இந்திய ஒலிம்பிக் சங்கம் ( IOA ) தேசிய சங்கத்திற்கு வழங்கிய அங்கீகாரத்தை ரத்து செய்து விட்டது.
மேலும் தற்போது தற்காப்பு கராத்தே விளையாட்டை பயிற்சி அளிக்க அனைத்து அரசு பள்ளிக்கூடங்களிலும் அனுமதி கொடுத்து அதற்க்காக கோடி கணக்கான ரூபாயும், ஒதுக்கி உள்ளது தமிழக அரசு.
மேலும் பள்ளி பெண் குழந்தைகளுக்கு பயிற்சி எடுக்கக்கூடிய கராத்தே மாஸ்டர்கள் முறையான பயிற்சி பெற்ற அங்கீகாரம் பெற்ற ஆசிரியர்களா என்று அரசு கூர்ந்து கவனிக்க வேண்டும்.
மேலும் குத்தகை அதாவது காண்ட்ராக்டர் அடிப்படையில் கராத்தே கலையை விற்பனை செய்வது அரசின் திட்டங்களை அசிங்கப்படுத்துவது போல் ஆகும் என்று சர்வதேச கராத்தே மாஸ்டர் தனசேகரன் கூறினார்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?