பிரேசிலுக்கு 50 சதவீத வரி விதிப்பு; அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உத்தரவு
Aug 01 2025
13

வாஷிங்டன் டி.சி.,
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் பதவியேற்றதில் இருந்து பல உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். சட்டவிரோத குடியேறிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை டிரம்ப் எடுத்துள்ளார்.
அமெரிக்காவின் பொற்காலம் மீட்கப்படும் வகையிலான நடவடிக்கையை எடுப்பேன் என தெரிவித்த அவர், சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு எதிராக கடுமையான வரி விதிப்புகளை அமல்படுத்தி உத்தரவிட்டார்.
இந்நிலையில், பிரேசில் நாட்டுக்கு மொத்தம் 50 சதவீத வரி விதிப்பதற்கான உத்தரவில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கையெழுத்திட்டு உள்ளார்.
இதுபற்றிய அந்த உத்தரவில், பிரேசில் அரசின் கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகள், அமெரிக்க வர்த்தகத்தில் எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தியது. அமெரிக்க குடிமக்களின் சுதந்திர பேச்சுரிமையையும் அது பாதித்து உள்ளது. அமெரிக்க வெளியுறவு கொள்கை மற்றும் பொருளாதார நலன்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளது என தெரிவிக்கின்றது.
இதனை தொடர்ந்து பிரேசிலுக்கு எதிராக கூடுதலாக 40 சதவீத வரி விதிக்கப்படுகிறது. இதனால், பிரேசிலுக்கு ஏற்கனவே விதித்த 10 சதவீத வரியுடன் சேர்த்து, மொத்தம் 50 சதவீத வரி விதிக்கப்படுகிறது. எனினும், விமான பாகங்கள், அலுமினியம், உரம் உள்ளிட்ட சில பொருட்களுக்கு விலக்குகளும் அளிக்கப்பட்டு உள்ளன. அவர் நேற்று இதற்கான உத்தரவில் கையெழுத்திட்ட நிலையில், 7 நாட்களில் அது நடைமுறைக்கு வரும் என கூறப்படுகிறது.
இதேபோன்று, இந்திய பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார். அமெரிக்க பொருட்களுக்கான இந்தியாவின் வரிகள் மிக அதிக அளவில் உள்ளன. அது உலகிலேயே மிக அதிக வரிவிதிப்பாகவும் உள்ளது. எனவே ஆகஸ்டு 1-ந்தேதி முதல் இந்தியா 25 சதவீத வரியை செலுத்தும் என அவர் தெரிவித்து உள்ளார்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?