news Breaking News
clock

பிரியங்கா மோகனின் மேட் இன் கொரியா படத்தின் டிரைலர்!

பிரியங்கா மோகனின் மேட் இன் கொரியா படத்தின் டிரைலர்!

பிரியங்கா மோகனின் மேட் இன் கொரியா படத்தின் டிரைலர் வெளியானது.

இயக்குநர் ரா. கார்த்திக் இயக்கத்தில் உருவான திரைப்படம் மேட் இன் கொரியா.

இதில், நாயகியாக நடிகை பிரியங்கா மோகன் நடித்துள்ளார்.

மேட் இன் கொரியா திரைப்படம் பீல் குட் பாணியில் எடுக்கப்பட்டுள்ளது.

திரையரங்குகளில் வெளியாகுமென எதிர்பார்க்கப்பட்ட இப்படம், நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வருகிற மார்ச் 12 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மொழிகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் ஒரு சிறிய கிராமத்தைச் சேர்ந்த பெண், கொரிய கலாசாரத்தின் மீதுள்ள ஈர்ப்பால் தென் கொரியாவிற்குப் பயணம் மேற்கொண்டு, அங்கு அவர் சந்திக்கும் சவால்களை மையப்படுத்தி இந்தப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மேட் இன் கொரியா படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%