என் வறண்ட மணற்பரப்பில்
காற்று வரைந்த கோடுகள் முதிர்ந்த மனக் காயங்களால்
தேய்ந்த முதுமையின் சாயல்
இரவின் குளிரில்
நம்பிக்கை நட்சத்திரங்கள் முத்துக்களாய் மின்னும்
ஆனால்...
காலை உதித்ததும்
ஆதவனின் உக்கிரம்
வறட்சியை மீண்டும் விழித்தெழ...
தாகம் தீர்க்கத் தண்ணீரைத்
தேடி அலைந்து,
தாங்க முடியாத ஏக்கத்தில் மழையின் வருகைக்குக் காத்திருக்கும்...
பாவப்பட்ட வறண்ட
பாலையான நான்...
என்றோ ஒருநாள் வான்மகளின்
வருகையால் வசந்தமில்லா பாலையான நான்...
வண்ணமலர் பூக்கும் சோலையாவது நிச்சயம்
நா.பத்மாவதி
கொரட்டூர்
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%