
உயிர்க்குள் ஒளியாய்,
பாசத்தில் நெருக்கமாய் நெஞ்சத்தின் நிழலாய்.
வாழ்வின் வழிதெரிந்த ஒளிக்கதிராய் நீ இருந்தாய்
விடியலில் ஆதவனாய்
சொல்லாமல் சொல்லும் மொழியாக நீயிருந்தாய்...
செல்லாத நெஞ்சில் உயிர் கொடுத்தாய்
பார்வையின் பூந்தோட்டத்தினை பார்த்தேன்.
உனை காணாமல்
நிமிஷம் கூட உயிருடன்
இருக்க விருப்பமில்லை..
வார்த்தை பேசவில்லை பார்வை மட்டும் போதும்,
அதில் உயிர் வாழும் புது பரிமாணம் தோன்றும்.
இதை நீ உணர்ந்தால் அதுவே போதுமென
விரும்புவதை உணர்ந்து விடு
உஷாமுத்துராமன்
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%