தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில், மகாகவி பாரதியாரின் பிறந்தாள் கருத்தரங்கம் புதுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கருத்தரங்கிற்கு தமுஎகச மாவட்டத் தலைவர் ராசி.பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். கருத்தரங்கில் புதுக்கோட்டை தமிழ்சங்கத் தலைவர் கவிஞர் தங்கம்மூர்த்தி, தமுஎகச முன்னாள் மாவட்டச் செயலாளர் சு.மதியழகன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். கவிஞர்கள் ரேவதி ராம், சாமிகிரிஷ், ஸ்ரீமலையப்பன் ஆகியோர் கருத்துரை வழங்கினர். கலைமாமணி முத்துக்கிருஷ்ணன், எல்.வடிவேல், மூகை சின்னையா, மிடறு முருகதாஸ், கு.பிரேமா, அ.சரவணன் ஆகியோர் விழிப்புணர்வு பாடல்களைப் பாடினர். முன்னதாக மாவட்டச் செயலாளர் ரெ.வெள்ளைச்சாமி வரவேற்க, பொருளாளர் மு.கீதா நன்றி கூறினார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?