
மதுரை மாவட்டம் மதுரை கிழக்கு ஒன்றியம் எல் கே பி நகர் அரசு நடுநிலைப் பள்ளியில் பாரதியாரின் 104 ஆவது நினைவு தினம் தலைமை ஆசிரியர் தென்னவன் தலைமையில் நடைபெற்றது. ஆசிரியை தமிழ்ச்செல்வி முன்னிலை வகித்தார். ஆசிரியை விஜயலட்சுமி வரவேற்றார்.
ஆசிரியை அருவகம் தொகுத்து வழங்கினார். மாணவி பவித்ரா பாரதியார் பாடல்கள் பாடி மகிழ்வித்தார். ஆசிரியை சித்ரா பாரதியார் பிறப்பு, பெற்றோர்கள், அவரின் வாழ்க்கை வரலாறு, எழுதிய கவிதைகள், பெண் விடுதலை முதலியன குறித்து உரை நிகழ்த்தினார்.
பாரதியார் பற்றிய வினாடி வினா நடைபெற்றது. வினாடி வினாவில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஆசிரியை அனுசியா நன்றி கூறினார்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?