பாமக பொதுக்குழு கூட்டம்: ராமதாஸ், அன்புமணி போட்டி அறிவிப்பு

பாமக பொதுக்குழு கூட்டம்: ராமதாஸ், அன்புமணி போட்டி அறிவிப்பு

விழுப்புரம் / சென்னை:

பாமக தலைமை நிலை​யம் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​: பாமக நிறு​வனர் மற்​றும் தலை​வர் ராம​தாஸ் உத்தர​வுபடி, திண்​டிவனம் - புதுச்​சேரி செல்​லும் வழி​யில் உள்ள பட்​டானூர் சங்​கமித்ரா திருமண மண்​டபத்​தில் வரும் 17-ம் தேதி காலை 10 மணிக்கு சிறப்பு பொதுக்​குழுக் கூட்​டம் நடை​பெற உள்​ளது.


இதில், மாநில, மாவட்ட, மாநகர, ஒன்​றிய, நகர நிர்​வாகி​கள் தவறாது கலந்​து​கொள்​ளு​மாறு கேட்​டுக்​கொள்​ளப்​படு​கிறார்​கள். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்​நிலை​யில், ராம​தாஸ் நடத்​துக்​கும் கூட்​டத்​துக்கு போட்​டி​யாக ஆக. 9-ம் தேதி பொதுக்​குழுக் கூட்​டம் நடை​பெறும் என்று பாமக தலை​வர் அன்​புமணி அறி​வித்​துள்​ளார்.


இது தொடர்​பாக அன்​புமணி மற்றும் பொதுச் செய​லா​ளர் வடிவேல் ராவணன் வெளி​யிட்ட அறிக்​கை​யில், “பாமக பொதுக்​குழுக் கூட்​டம் மாமல்​லபுரத்​தில் உள்ள கான்ப்​ளுயன்ஸ் அரங்​கில் ஆக. 9-ம் தேதி நடை​பெறும். பொதுக்​குழு உறுப்​பினர்​கள் தவறாது பங்​கேற்க வேண்​டும்” என்று தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%