பாமக தலைவராக ராமதாஸ் தேர்வு

பாமக தலைவராக ராமதாஸ் தேர்வு

சென்னை:

பாமக மாநில சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் புதுச்சேரி அருகே விழுப்புரம் மாவட்டத்துக்குட்பட்ட பட்டானூ ரில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பாமக நிறுவனர் ராம தாஸ் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். முன்ன தாக அன்புமணி ராமதாஸ் தலைவர் பொறுப்பு வகித்து வந்தார். இந்தப் பொதுக்குழுக் கூட்டத்தில் 37 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பொதுக்குழுவுக்கு நிறுவனரின் எழுத்துப்பூர்வ ஒப்புதலும், அவருக்கு அழைப்பும் விடுக்கப் பட வேண்டும் என்று கட்சியின் விதியில் திருத்தம் செய்யப் பட்டது. மேலும், வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி தொடர்பான முடிவுகளை எடுக்க ராமதாஸுக்கு முழு அதிகாரம் வழங்கியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%