பாமகவில் அதிகார மோதல் உச்சம்: அன்புமணிக்கு எதிராக தீர்மானம்
Jul 10 2025
15

திண்டிவனம், ஜூலை 8-
பாமக நிறுவனர் ராமதாசுக்கும் அவரது மகனும் பாமக செயல் தலைவருமான அன்புமணிக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த ஓமந்தூரில் பாமக செயற்குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தை அன்புமணி ராமதாஸ் புறக்கணித்த நிலையில், கூட்டத்தில் அன்புமணிக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பொதுவெளியில் ராமதாசின் பேச்சுக்கு அன்புமணி கட்டுப்படாமல் இருப்பது கண்டிக்கத்தக்கது. நிறுவன தலைவருக்கு களங்கம் உருவாக்கும் வகையில் செயல் கண்டிக்கத்தக்கது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் 2026 இல் ஆட்சி அதிகாரத்தில் பங்கு பெறக் கூடிய வகையில் கூட்டணி அமைக்க ராமதாஸ்க்கு அதிகாரம், நிறுவனருக்கு களங்கத்தை உருவாக்குபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ராமதாசுக்கு முழு அதிகாரம் உள்ளிட்ட 25 தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமை யில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கவுரவத் தலைவர் கோ.க. மணி எம்எல்ஏ, பொதுச்செயலாளர் முரளி சங்கர், இணைப் பொதுச்செயலாளர் அருள் எம்எல்ஏ, பொரு ளாளர் சையத் மன்சூர் உசேன் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். இதற்கிடையில் பாமக செயல் தலைவர் அன்புமணியும் தனியாக கூட்டம் அறிவித்துள்ளார்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?