பாகிஸ்தானில் தொடர் மழை, வெள்ளம்; பலி எண்ணிக்கை 1006 ஆக உயர்வு
Oct 04 2025
56
லாகூர்,
பாகிஸ்தானில் நடப்பு ஆண்டில் தொடர் மழையால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால், நாடு முழுவதும் வெள்ளப்பெருக்கில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 1006 ஆக உயர்ந்து உள்ளது.
இதுபற்றி அந்நாட்டின் தேசிய பேரிடர் மேலாண் கழகம் (என்.டி.எம்.ஏ.) வெளியிட்டு உள்ள செய்தியில், பாகிஸ்தானில் கனமழை பெய்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கைபர் பக்துன்குவா, பஞ்சாப், சிந்த் மற்றும் கில்ஜித்-பல்திஸ்தான் மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன.
இவற்றில், கைபர் பக்துன்குவா மாகாணத்தில் வெள்ள பாதிப்பில் சிக்கி 504 பேர் உயிரிழந்து உள்ளனர். பஞ்சாப் மாகாணத்தில் 304 பேரும், சிந்த் மாகாணத்தில் 80 பேரும் கில்ஜித்-பல்திஸ்தான் மாகாணத்தில் 41 பேரும் உயிரிழந்தனர். ஒட்டு மொத்தத்தில் 275 குழந்தைகள், 163 பெண்கள் மற்றும் 568 ஆண்கள் உயிரிழந்து உள்ளனர்.
இதனை தொடர்ந்து மீட்பு மற்றும் நிவாரண பணிகள் நடந்து வருகின்றன. வெள்ள பாதிப்பு நிலவரங்களை ஆய்வு செய்யும் பணியும் நடந்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக நாட்டில் பணவீக்கம் தற்காலிக அடிப்படையில், அதிகரித்து காணப்படும் என்றும் அந்நாட்டு அரசு தெரிவித்து உள்ளது.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?