news Breaking News
clock

பனி விழும் நந்தவனம்

பனி விழும் நந்தவனம்


வெண் முத்துக்கள் போல் மலர்களில் அமர்ந்திருக்கும் பனித்துளியே...

கதிரவன் வரும் வரை நீ களங்கம் இல்லாமல் சிரித்துக் கொண்டிரு. 

கதிரவன் வந்து விட்டால் உருகி மண்ணை தொட வேண்டி இருக்கும் 

அதற்குள் மலர்களுடன் மௌன மொழி பேசி ரசித்து விடு

உன் சிரிப்பில் நாங்கள் மகிழ்கிறோம்

நந்தவனத்தில் உள்ள விருட்சங்களில் உனக்கு எல்லாம் பிடித்திருப்பதால் அனைத்திலும் அமர்ந்து விடுகிறாயோ?

பாரபட்சம் இல்லா உன் மனம் நான் அறிவேன் 

உன்னை ரசிக்கவே நந்தவனத்திற்கு ஆதவன் வருவதற்கு முன் நான் வந்து விடுவதை நீ அறிவதால் என்னவோ முத்துக்கள் தெரிய என்னை பார்த்து சிரிக்கிறாய்...

உன் சிரிப்பை ரசிக்க தெரிந்தவர் காண்பது சொர்க்கம்.


உஷா முத்துராமன்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News