பண்ருட்டி முன்னாள் அதிமுக எம்எல்ஏ வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

கடலூர்:
கடலூர் மாவட்டம், பண்ருட்டி முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சத்யா பன்னீர்செல்வம் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர். சத்யா பன்னீர்செல்வம் சட்டமன்ற உறுப்பினராக இருந்த போது, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. இதனை தொடர்ந்து வெள்ளிக்கிழமை காலை கடலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார், சத்யா பன்னீர்செல்வத்தின் பண்ருட்டியில் உள்ள வீட்டில் சோதனை மேற்கொண்டனர். சத்யாவின் கணவர் பன்னீர்செல்வம், பண்ருட்டி நகர்மன்றத் தலை வராக இருந்தபோது ஊழல் புரிந்ததாக ஏற்கெனவே லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கின் அடிப்படை யில், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர். தற்போது சத்யா பன்னீர்செல்வம் மீது புதிய வழக்குப் பதிந்து இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சோதனை நடைபெற்று வரும் வேளையில் திடீரென சத்யாவிற்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். அவரை உடனடி யாக ஆம்புலன்ஸ் மூலம் கடலூரில் உள்ள தனியார் மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். சோதனை நடைபெற்ற இடத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?