பணியாளர் இல்லாததால் அரசு விடுதி கழிவறைகளை மாணவர்களே கழுவும் கொடுமை: நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

பணியாளர் இல்லாததால் அரசு விடுதி கழிவறைகளை மாணவர்களே கழுவும் கொடுமை: நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

சென்னை: ​

போ​திய பணி​யாளர்​கள் இல்​லாத​தால் அரசு விடுதி கழி​வறை​களை மாணவர்​களே கழு​வும் கொடுமை அரங்​கேறி வருவதாக பாஜக மாநில தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் தெரி​வித்​துள்​ளார்.


இதுகுறித்து அவர் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: சென்​னை​யில் உள்ள கல்​லூரி மாணவர்​களுக்​கான 36 அரசு ‘சமூகநீதி விடு​தி​கள்’ எந்​தவொரு அடிப்​படை வசதி​களு​மின்றி நோய் பரப்​பும் கூடாரங்​களாகி, வாழத்​தகு​தி​யற்ற வசிப்​பிடங்​களாக உரு​மாறி வரு​வது அதிர்ச்​சி​யளிக்​கிறது.


புழு​விழுந்த உணவும், துர்​நாற்​றம் வீசும் நீரும், பராமரிப்​பில்​லாத கழி​வறை​களும், சிதிலமடைந்த கட்​டிடங்​களும் உள்ள அரசு விடு​தி​களை வைத்​துக் கொண்டு ஏழை எளிய மாணவர்​களின் சமூக நீ​தியை நிலை​நாட்டப்​போவ​தாக திமுக அரசு பெயர்​ மாற்​றம் செய்​தது, மக்​கள் வரிப்​பணத்​தைக் கையாடல் செய்​ததை மறைக்​கத்​தானோ என்ற சந்​தேகம் எழுந்​துள்​ளது.


காரணம், 23 அரசு விடு​தி​களில் நூல​கம் அமைப்​ப​தற்​காக ரூ.21 லட்​சம் செல​வழிக்​கப்​பட்​டுள்​ள​தாக திமுக அரசு மார்​தட்டி வரும் வேளை​யில், பல நூல​கங்​களில் புத்​தகங்​களோ, முறை​யான இணையதள வசதியோ இல்​லை.


மாலை​யில் மாணவர்​களுக்கு வழங்கவேண்​டிய சிற்​றுண்டி வழங்​கப்​ப​டாததோடு, மாணவர்​களின் சுகா​தார மேம்​பாட்​டுக்காக வழங்​கப்​படும் ரூ.150 கூட அவர்களின் கைகளில் சென்று சேர​வில்லை என்​பதும் குறிப்​பிடத்​தக்​கது.


அதை விட போதிய பணி​யாளர்​களை பணி​யமர்த்​தாத​தால், விடு​திக் கழி​வறை​களை மாணவர்​களே கழு​வும் கொடுமை​யும் அரங்கேறி வரு​கிறது. மாநிலத்​தின் தலைநகரில் உள்ள விடு​தி​களே கவலைக்​கிட​மாக உள்ள நிலை​யில், தமிழகத்​தின் கடைக் கோடியில் இருக்​கும் அரசு விடு​தி​களின் நிலை என்​ன​வாக இருக்​கும்? மாணவர்​களின் நலனை விடுத்​து, விளம்​பரத்தை தூக்கிப்பிடித்​து, அநீதி இழைக்​கும் இந்த போலி சமூகநீதி மாடல் அரசுக்கு மக்கள் தகுந்த பாடம் கற்பிப்பார்கள் என்​பது நிச்​ச​யம்​. இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%