
இந்த அறைகள் வெப்பமாயிருக்கின்றன
சுழலும் மின்விசிறிகூட
அனல் தெளிக்கிறது..
ஜன்னல் திறந்தால்
காற்றில் வெயிலின் வாடை..
ஒதுங்குவதற்கு மீதமிருந்த
ஓரிரு மரங்களும்
வெட்டப்பட்டுவிட்டன சாலையின்
விரிவாக்கத்தின் பொருட்டு..
மினரல் வாட்டரும்
குளிரூட்டப்பட்ட ஜில்லிட்ட நீரும்
இதம் சேர்க்கவில்லை..
மொபைலும் தொலைக்காட்சியும்
நேரங்களை தின்று தீர்க்க
பகலும் இரவும்
செரிக்காமல் வதைக்கிறது..
காப்பகங்களில் அடைக்கப்பட்ட
அன்பினாலயங்கள் தொழப்படுவதில்லை..
நேர்ந்துவிட்ட ஆட்டுக்குட்டிகள்
உயிர்மீள்வதில்லை..
தவறிய உறக்கங்களில்
நட்சந்திரங்கள் சிந்துகின்றன
சில ஒலைக்குடிசைகள்..!
ம.முத்துக்குமார்
வே.காளியாபுரம்
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%