
மங்கிய நிலவொளி மயக்கம் தந்திட
மங்கை உன்னை மெல்லப் பார்த்தேன்
உன் சிவந்த உதட்டோரப் புன்னகை
என் கண்வழியே மனதில் நுழைந்தது
இதமான காற்றில் இன்பம் இரட்டிப்பானது
தொட்டியில் பூத்தமலர்கள்
குலுங்கிச் சிரிக்க
மொட்டுக்கள் என்னவோ வெட்கிக் குனிந்தன
அரும்புகள் தந்தன அற்புத வாசனை
அசந்து போகிறேன்
நிலாவின் ஒளியென்ன அத்துனை ரகசியம் நிறைந்ததா
மரங்களும் நிமிர்ந்து ரசிக்க சின்ன
செடிகளும் நாணித் தலை கவிழ
காதல் அரங்கேற்றமும் அன்பு பரமாற்றமும்
அணி வகுத்தல்லவா அசைந்து போகிறது
உள்ளம் சொல்வதை உனக்கும் சொல்கிறேன்
ஒப்புதல் தந்து பன்மை தவிர்ப்பாய்
ஊரும் உறவுமாய் ஒருங்கே இணைவோம்
கருத்தொருமித்த காதலால் காலமெலாம்
கண்கள் சந்திப்பில் மனதை சேர்த்து
மனமொத்த தம்பதியாய் மகிழ்வாய் வாழ்வோம்
கதிரவன் வரும்வரை காத்திருப்போம்
பனித்துளி போல பதமாய் மறைவோம்
வி.பிரபாவதி
மடிப்பாக்கம்
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?