நவ. 23-ல் பராமரிப்புப் பணிக்காக 49 மின்சார ரயில்கள் ரத்து!

நவ. 23-ல் பராமரிப்புப் பணிக்காக 49 மின்சார ரயில்கள் ரத்து!

சென்னை - அரக்கோணம் இடையே உள்ள திருநின்றவூர் ரயில் நிலையப் பணிமனையில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், வரும் நவம்பர் 23 அன்று(சனிக்கிழமை) 49 புறநகர் ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படவுள்ளன. இதுகுறித்துச் சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், நவ.23 காலை 7 மணி முதல் பிற்பகல் 3.40 மணி வரை திருநின்றவூர் பணிமனையில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், அந்த நேரத்தில் அந்த வழித்தடத்தில் இயக்கப்படும் 49 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு ரயில்கள் இயக்கம் எனினும், பயணிகளின் வசதிக்காக அதே நாளில் (நவ.23) காலை 6.30 மணி முதல் 11 மணி வரை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து அரக்கோணம், திருத்தணி, ஆவடி ஆகிய பகுதிகளுக்கு இடையே 17 பயணிகள் சிறப்பு ரயில்கள் குறிப்பிட்ட நேரங்களில் இயக்கப்படவுள்ளன என்றும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%