நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

நல்லாசிரியர் விருதுக்கு  விண்ணப்பிக்கலாம்

சென்னை:

டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 20 முதல் ஆகஸ்ட் 3 வரை இணையதளம் மூலம் பெறப்படும் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. செப்டம்பர் 5 ஆசிரியர் தின விழா வில் 386 ஆசிரியர்களுக்கு விருது வழங்கப்படும். இதில் தொடக்க நடுநிலைப் பள்ளிகளில் 171, மேல்நிலைப் பள்ளி களில் 171, மெட்ரிகுலேசன் பள்ளிகளில் 38, மற்ற பள்ளி வகைகளில் 6 ஆசிரியர்கள் என பகிர்வு செய்யப்பட்டுள்ளது. விருது பெறும் ஆசிரியர்களுக்கு ரூ.10,000 ரொக்கப் பரிசு, ரூ.2,500 மதிப்பிலான வெள்ளிப் பதக்கம், பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பயணப்படி வழங்கப்படும். விண்ணப்பிக் கும் ஆசிரியர்கள் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் கற்பித்த லில் பணிபுரிந்திருக்க வேண்டும். அரசியல் கட்சிகளுடன் தொடர்புடையவர்கள், குற்றச்சாட்டுகள் அல்லது ஒழுங்கு நட வடிக்கைகளுக்கு உட்பட்டவர்கள், கல்வியை வணிக ரீதியாக கருதுபவர்கள் ஆகியோர் விண்ணப்பிக்க தகுதி யற்றவர்கள். மாவட்ட அளவில் தேர்வு குழுக்கள் அமைக்கப்பட்டு நேர்முகத் தேர்வு நடத்தப்பட்ட பின் மாநில அளவில் இறுதித் தேர்வு நடைபெறும். ஆகஸ்ட் 14-க்குள் மாவட்ட பரிந்து ரைகள் மாநில அளவிற்கு அனுப்பப்பட வேண்டும். தேசிய விருது பெற்ற ஆசிரியர்கள் மீண்டும் விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%