
சென்னை:
சென்னை விமான நிலையத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், பாதுகாப்பு அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த மிரட்டல் குறித்து தகவல் தெரிந்த வுடன் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். அதன் பின்னர், சென்னை விமான நிலையத்தின் அனைத்து பகுதிகளி லும் தீவிர சோதனை நடத்தப்பட்டது. அந்த சோதனையில் சந்தேகத்திற்குரிய பொருள் எதுவும் கண்டுபிடிக்கப்படாத நிலையில், வெடிகுண்டு மிரட்டல் போலியானது என்பது உறுதி செய்யப்பட்டது. இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை விமான நிலையம் முழுவதும் பாதுகாப்பு அதி கரிக்கப்பட்டுள்ளது. சோதனை நடைபெறும் பகுதியில் கூடு தல் கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாது காப்பு அதிகரிப்பால் வெளிநாடுகளுக்கு செல்லும் விமானங் கள் புறப்படுவதில் சிறிது தாமதம் ஏற்பட்டது. மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுத்த நபர் யார் என்பது குறித்து அதி காரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?