பள்ளிக் கல்வித்துறை நலத் திட்டங்களுக்கு ஆதார் கட்டாயம்

பள்ளிக் கல்வித்துறை நலத்  திட்டங்களுக்கு ஆதார் கட்டாயம்

சென்னை:

தமிழ்நாட்டில் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்களை பெற ஆதார் எண் கட்டாயம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த நலத் திட்டங்களின் பலன்களைப் பெற விரும்பும் பயனாளிகள் ஆதார் வைத்திருக்க வேண்டும் அல்லது ஆதார் அங்கீ காரத்துக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறையின் கீழ் விலையில்லா பாடப்புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், விலையில்லா சைக்கிள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங் கள் செயல்படுத்தப்படுகின்றன. இவற்றைப் பெறுவதற் கான பல்வேறு ஆவணங்களைக் குறிப்பிட்டு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. ஆதார் எண் கிடைக்காத பட்சத்தில் கடவுச்சீட்டு, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவைகளில் ஏதாவது ஒன்றை வழங்கலாம் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. ஆதார் அங்கீகாரம் பெறும் போது, விரல் ரேகை பதிவில் சிக்கல் ஏற்பட்டால் முகத்தை ஸ்கேன் செய்து அங்கீகாரம் பெறலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%