தொழில் நெறி வழிகாட்டும் கண்காட்சி - கருத்தரங்கம்

தொழில் நெறி வழிகாட்டும் கண்காட்சி - கருத்தரங்கம்



இராமநாதபுரம், ஜன.- இராமநாதபுரம் வேலுமனோகரன் கலை மற்றும் அறி வியல் மகளிர் கல்லூரியில், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சார்பில் தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்க நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் சிம் ரன்ஜீத் சிங் காலோன் தலைமை தாங்கி, தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி அரங்கை திறந்து வைத்து பார்வை யிட்டார். மாணவிகள் எதிர்காலத்தில் தேர்வு செய்யக் கூடிய பல்வேறு தொழில் வாய்ப்புகள், வேலைவாய்ப்பு திட்டங்கள், பயிற்சி வாய்ப்புகள் குறித்து விரிவாக எடுத்து ரைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட வேலைவாய்ப்புத் துறை மண்டல இணை இயக்குநர் சே. திருமலைச்செல்வி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் மதுக்குமார், கல்லூரி தாளாளர் வேலுமனோகரன், மாவட்ட குழந்தைகள் பாது காப்பு அலுவலர் சிவகுமார், வேலைவாய்ப்பு இளநிலை அலுவலர் மார்த்தாண்ட பூபதி உள்ளிட்ட அரசு அலு வலர்கள் மற்றும் கல்லூரி நிர்வாகிகள் கலந்து கொண்ட னர். மாணவிகளுக்கு பயனளிக்கும் வகையில் தொழில் நெறி தொடர்பான ஆலோசனைகள் வழங்கப்பட்டு, அவர் களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%