தைப்பூசம் ஸ்பெஷல்

தைப்பூசம் ஸ்பெஷல்

♦️ *:*🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺  

***************************

🌹 *சிறப்பு வாய்ந்த தைப்பூசம்* 


நம் எல்லோருமே தைப்பூசம் என்றால் முருகப் பெருமான் பார்வதி தேவியிடம் வேல் வாங்கி ய சிறப்பு தினம் என்றும், முருகப்பெருமானு க்கு இந்த விசேஷ நாளில் வழிப்பட்டால் முருகனின் ஆசி கிடைக்கும் என்று வணங்கி வருகிறோம். 


ஆனால் உண்மையில் இந்த நந்நாளில் முருகப்பெருமானுக்கு மட்டுமின்றி, ஏராளமான கடவுள்களுக்கும் இது ஒரு சிறப்பு வாய்ந்த நாள் என்று நம்மில் பலருக்கும் தெரியாது. தைப்பூசத்தின் சிறப்புகள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்!


🌹 *சிறப்புகள் வாய்ந்த தைப்பூச தினம்:* 


தை மாதத்தில் வரும் பௌர்ணமியும், 

பூச நட்சத்திரமும் ஒன்று சேரும் இந்த நன்னாள் தான் தைப்பூச தினமாக வழிபடப்படுகிறது. தைப்பூசம் என்பது முருக பெருமானுக்குரிய விரத நாளாக மட்டுமே கருதப்படுகிறது. 


ஆனால் இது முருக வழிபாட்டிற்கு மட்டு மின்றி சிவ வழிபாடு, சக்தி வழிபாடு, குரு வழிபாட்டிற்கும் மிகவும் உகந்தது ஆகும். அதனால் தைப்பூச நாளில் எந்த தெய்வத்தை வழிபட்டால் அளவில்லாத பலன் கிடைக்கும். 


அனைத்து தெய்வங்களுக்கும் உரியதாக சொல்லப்படும் அளவிற்கு இந்த தை மாத பூசம் நட்சத்திரம் மற்றும் பெளர்ணமி திதி இணைந்து வரும் நாளுக்கு அப்படி என்ன தனிச்சிறப்பு என்பதை வாங்க தெரிந்து கொள்ளலாம்.


🌹 *உலகமெங்கும்* *கொண்டாடப்படும் தைப்பூசம்* 


இந்தியாவில் மட்டுமின்றி இலங்கை, சிங்கப் பூர், மலேசியா, மொரிசியஸ் நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. தைப்பூசம் தினத்தன் று எல்லா முருகன் தலங்களிலும் முருகப் பெருமான் வீதி உலா வருவார். 


பவுர்ணமி தினத்தன்று முழு நிலவு சமயத்தில் பூசம் நட்சத்திரம் வரும்போது சிறப்பு வழிபாடுகள் செய்வதே தைப்பூசத்தின் முக்கிய நிகழ்வாகும். தைப்பூசத்தன்று முருகன் நரகாசுரனை வதம் செய்த நிகழ்வு ஒரு சிறப்பு விழாவாக இன்றும் பழனியில் கொண்டாடப்படுகிறது.


🌹 *முருகன் பார்வதி தேவியிடம் வேல்* பெற்ற நாள்:


அசுரர்களுடன் போரிட தலைமை தாங்கி செல்லக்கூடிய சக்தி வாய்ந்த தலைவன் தேவை என ஈசனிடம் வேண்டினர். 


கருணைக்கடலான எம்பெருமான், தன் தனிப்பட்ட சக்தியிலிருந்து, நெற்றிக் கண்ணிலிருந்து உருவானவர் தான் கந்தன். நெற்றிக்கண்ணிலிருந்து வெளிப்பட்ட ஆறு தீப்பொறிகள் ஆறு அழகிய குழந்தைகளாகின. அந்த குழந்தைகளை கார்த்திகை பெண்கள் வளர்த்தனர். 


பின்னர் ஆறுமுகமாக உருவெடுத்தார். ஆண்டி கோலத்தில் பழனி மலை மீது நின்றிருக்கும் முருகனுக்கு, அன்னை பராசக்தி தன் சக்தி முழுவதையும் ஒன்று திரட்டி ஞான வேல் வழங்கியது இந்த தைப்பூச திருநாளில் தான் என புராணங்கள் சொல்கின்றன. 


🌹 *வள்ளலார் ஜோதி வடிவில் காட்சி தந்த* தினம்:


 *வள்ளலார் ராமலிங்க* சுவாமிகள் ஒரு தை மாத வெள்ளிக்கிழமை *புனர்பூச நட்சத்திரத்தி* ல்தான் சமாதியானார். இதை குறிக்கும் விதமாக அவர் சமாதியான வடலூரில், தைப்பூச நாளில் லட்சக்கணக்கானோர் கூடி வள்ளலார் விழாவைக் கொண்டாடுகிறார்கள். 


*வடலூரில் தை மாதத்தில் தைப்பூச நாளில் பிரம்மஞான சபையில் அதிகாலை ஏழு திரை விலக்கி ஜோதி தரிசனம் நடைபெறுகிறது. வள்ளலார் ராமலிங்க அடிகளார் தைப்பூச திருநாளிலேயே ஸித்தி அடைந்ததாக சொல்லப்படுகிறது.*


🌹 *வேறு என்னவெல்லாம்* சிறப்புகள்:


🚩 *தைப்பூச திருநாளில்* தான் உலகில் முதன்முதலாக நீரும், நீரில் இருந்து பிற ஜீவா ராசிகளும் தோன்றியதாக புராணங்கள் கூறுகின்றன. 


🚩 *முருகப்பெருமான்* வள்ளி பிராட்டியை தைப்பூச நன்னாளில் தான் திருமணம் செய்து கொண்டராம். 


🚩 *திருச்சி ஸ்ரீரங்கத்தில்* வீற்றிருக்கும் அரங்கநாதர் காவிரி கரையோரம் குடிகொண்டிருக்கும் தன் தங்கையான சமயபுரம் மாரியம்மனுக்கு சீர் கொடுத்த நாளும் இந்த தைப்பூச தினம் தான். 


🚩 *நெல்லையில் உள்ள* தாமிரபரணி நதிக்கரையில் நெல்லையப்பரை நினைத்து விரதமிருந்த காந்திமதி அம்மன், தைப்பூச தினத்தில் நெல்லையப்பரின் அருளைப் பெற்றார். 


🚩 *காவிரி தாய்* ஸ்ரீரங்கம் அரங்கநாதரை நினைத்து தீவிர தவத்தில் இருந்ததனா ல், நாராயண பெருமான் காவிரி தாயின் தவத்தை மெச்சி தரிசனம் வழங்கியதும் இந்த நந்நாளில் தான்.


🚩 *முருகப்பெருமான்* நரகாசுரனை வதம் செய்த நாளை நினைத்து இன்று பழனியில் முருக பகதர்கள், காவடி எடுத்து கொண்டாடுகின்றனர். 

 

🚩 *வாயு பகவானும்* , வர்ண பகவானும், அக்கினி பகவானும் ஈசனின் அதீத சக்தியை உணர்ந்த நாளாகவும் இந்நாள் போற்றப்படுகிறது. அதாவது இயற்கையை கட்டுப்படுத்தும் சக்தியாக இறைவனே இருக்கிறான் என்பது உணர்த்தப்பட்ட புண்ணியநாள், தைப்பூச நன்னாளாகும். 


🚩 *தைப்பூச* நன்னாளில்தான் ஞானசம்பந்தர் மயிலாப்பூரில் பாம்பு கடித்து இறந்து போன பூம்பாவை என்ற பெண்ணின் அஸ்தி கலசத்தில் இருந்து அப்பெண்ணை உயிருடன் எழுந்து வரும் படி பதிகம் பாடி, உயிர்ப்பித்தார். இது மயிலை கபாலீஸ்வரர் ஆலயத் தில்தான் நடந்தது. இதை மயிலைப்புராணம் கூறுகிறது. இச்சன்னதி மயிலை கபாலீஸ்வரர் ஆலயத்தில் கொடி மரம் அருகே உள்ளது.


🚩 *தில்லை* நடராசருக்கும் இந்தப் பூச நன்னாள் உகந்தது. இவர் பார்வதியுடன் நடத்திய ஆனந்த நடனத்தை தில்லை சிதம்பரத்தில், பதஞ்சலி முனிவர் (ஆதிசேஷ அம்சம்) வியாக்ர பாதர் (புலிக்கால் முனிவர், ஜைன முனிவர்) இவர்களும் தில்லை வாழ் அந்தணர் மூவாயிரவர்களும் முப்பத்து முக்கோடி தேவர்களும் இந்த தைப்பூச நன்னாளில்தான் ஆனந்த நடனம் கண்டு களித்தனர்.


 *இத்தனை சிறப்புகள்* வாய்ந்த இந்த நந்நாளில் நீங்கள் முருகன் கோயில்கள் மட்டுமின்றி, சிவன், பெருமாள் என ஏனையக் கோயில்களுக்கும் சென்று வழிபடலாம்.


*🌹 வெற்றிவேல்முருகனுக்கு அரோகரா🙏*

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%