news Breaking News
clock

தொடக்கப் பள்ளியில் தமிழ்நாடு தின சிறப்பு உரையரங்கம்...!*

தொடக்கப் பள்ளியில் தமிழ்நாடு தின சிறப்பு உரையரங்கம்...!*


வந்தவாசி, ஜூலை 19:


திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தெள்ளார் ஜோதி அரசு நிதியுதவி தொடக்கப்பள்ளியில் தமிழ்நாடு தினம் கொண்டாடுவோம் சிறப்பு உரையரங்கம் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு பள்ளி தலைமை ஆசிரியர் ப.சீனிவாசன் தலைமை தாங்கினார். ஆசிரியை வளர்மதி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக, ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா.சீனிவாசன் பங்கேற்று தமிழ்நாடு தினம் ஏன் கொண்டாடப் படுகிறது என்பது பற்றிய கருத்துக்களை வழங்கினார். மேலும் தமிழ்ப் பெயர்களையே குழந்தைகளுக்கு சூட்ட வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்த நிகழ்ச்சியில் செந்தமிழ்நாடு... என்ற தலைப்பில் நடைபெற்ற பல்திறன் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு புத்தக பரிசுகள் வழங்கப்பட்டது. இறுதியில் ஆசிரியை முல்லை நன்றி கூறினார்.


பா. சீனிவாசன், வந்தவாசி.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News