துாதரக வங்கி கணக்கில் ரூ.2 கோடி கையாடல்: முன்னாள் அதிகாரி மீது சி.பி.ஐ., வழக்கு
Dec 23 2025
10
புதுடில்லி: ஜெனீவாவில் உள்ள ஐ.நா.,வுக்கான இந்தியாவின் நிரந்தர துாதரக வங்கி கணக்கில் இருந்து, 2 கோடி ரூபாய் கையாடல் செய்த முன்னாள் அதிகாரி மீது சி.பி.ஐ., வழக்கு பதிந்து விசாரித்து வருகிறது.
ஐரோப்பிய நாடான ஸ்விட்சர்லாந்தின் ஜெனீவாவில் ஐ.நா.,வுக்கான இந்தியாவின் நிரந்தர துாதரகம் இயங்கி வருகிறது. கடந்த ஆண்டு டிசம்பரில், இந்த துாதரகத்தின் துணை பிரிவு அதிகாரியாக மோஹித் என்பவர் பணியில் சேர்ந்தார்.
யு.பி.எஸ்., எனப்படும் ஸ்விட்சர்லாந்தின் மத்திய வங்கியிடம் கணக்குகளை ஒப்படைக்கும் பொறுப்பு இவருக்கு வழங்கப்பட்டது. அமெரிக்க டாலர்கள் மற்றும் ஸ்விஸ் நாட்டின் பிராங்ஸ் கரன்சிகளில் இந்த வங்கியில் கணக்கு வைக்கப்பட்டிருந்தது.
இதில் ஸ்விஸ் பிராங்ஸ் கரன்சி கணக்கில் முறைகேடுகள் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. துாதரகம் சார்பில், விற்பனையாளரின் வங்கி கணக்குகளுக்கு அவர்கள் அளிக்கும் ரசீதுகள் அடிப்படையில் பணப் பரிவர்த்தனை செய்யப்படும்.
பணம் வங்கியில் செலுத்த, விற்பனையாளரின் வங்கி கணக்குக்கான க்யூ.ஆர்., கோடுகள் மற்றும் ரசீது விபரங்கள் இணைக்கப் பட்டிருக்கும்.
விசாரணை இந்த க்யூ.ஆர்., கோடுகள் கொண்ட நகல் ஆவணங்களை எடுத்துச் செல்லும் பணியை தான் மோஹித் மேற்கொண்டு இருந்தார்.
அதி ல், சில விற்பனையாளர்களின் க்யூ.ஆர்., கோடுகளை மாற்றி, தனது வங்கி கணக்கின் க்யூ.ஆர்., கோடு ஒட்டி இரண்டு கோடி ரூபாய் வரை மோ சடி செய்துள்ளார்.
பல மாதங்களாக நடந்து வந்த இந்த மோசடி, சமீபத்தில் நடத்திய கணக்கு தணிக்கையில் தெரிய வந்தது.
இதை யடுத்து, எழுத்துப்பூர்வமாக தனது தவறை மோஹித் ஒப்புக் கொண்டதால், உடனடியாக பணியில் இருந்து நீக்கப்பட்டு, அங்கிருந்து குடும்பத்து டன் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார்.
இந்த விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ., வழக்கு பதிந்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது. மோசடி செய்த பணத்தை, 'கிரிப்டோ கரன்சி' எனப்படும் மெய்நிகர் நாணயங்களில் அவர் முதலீடு செய்ததும் கண்டறியப்பட்டுள்ளது.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?