திருச்சிராப்பள்ளி: தமிழ்நாடு அரசு பால் வளத்துறை அரசு அலுவலர் மற்றும் பணியாளர்கள் சங்க மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சியில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் ஜெயபாலன் தலைமை வகித்தார். மாநில பொருளாளர் கார்த்திக் வரவேற்றார். தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநில தலைவர் அமிர்த குமார் சிறப்புரையாற்றினார். பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தமிழகத்தில் புதிதாக தோற்றுவிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களிலும் துணை பதிவாளர் (பால்வளம்) அலுவலகம் அமைக்க வேண்டும். அனைத்து பணியிடங்களுக்கும் தகுதிப்பட்டி யல் உரிய தேதியில் வழங்கி பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநிலச் செயலாளர் வெங்கடேசன் நன்றி கூறினார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?