news Breaking News
clock

தீதும் நன்று பிறர் தர வாரா

தீதும் நன்று பிறர் தர வாரா


கணியன் பூங்குன்றனார் 


நன்மையும் தீமையும் நமது செயல்களால் விளைகின்றன !


அவை புறக்காரணிகளால் வருவதில்லை !


நமக்கு ஏற்படும் நன்மையும் தீமையும் பிறரால் உண்டாவதில்லை !


அவை நம்முடைய எண்ணங்கள் மற்றும் செயல்களில் பிரதிபலிப்பே !


நாம் வாழ்க்கையில் நடக்கும் இன்ப துன்பங்களுக்கு மற்றவர்களை குறை சொல்வது தவறு !


நம்முடைய வளர்ச்சிக்கும் வீழ்ச்சிக்கும் நாமே பொறுப்பு !


"யாதும் ஊரே யாவரும் கேளிர் "என்ற உலகளாவிய சகோதரத்துவத்தை இப்பாடல் இன்பம் வரும் போது துள்ளி குதிக்காமலும் துன்பம் வரும்போது துவண்டு போகாமலும் இருக்க வேண்டும் !


ஆற்றில் மிதக்கும் தெப்பம் நீரோட்டத்தின் வழியே செல்வது போல வாழ்க்கை பயணம் இயற்கை நியதிப்படி நகருகிறது !


அதை உணர்ந்தால் எவரையும் புகழவோ இகழவோ வேண்டியதில்லை! 


ஆறு ஓடுவது போலத்தான் நம் வாழ்க்கையும் !


அது இயற்கையின் நியதிப்படி நடக்கிறது !


இன்பமும் துன்பமும் வெளியிலிருந்து திணிக்க படுபவை அல்ல !


அவை உனது முந்தைய முடிவுகளின் அறுவடை !


நம் உயர்வுக்கும் தாழ்வுக்கும் நாமே பொறுப்பு !


புறச் சூழலை விட நாம் அக மனமே நம் வாழ்வை தீர்மானிக்கிறது !


எளியோரை இகழாமலும் அனைவரையும் சமமாக மதிக்க வேண்டும் !


நாம் என்ன விதைக்கிறோமோ அதையே அறுவடை செய்கிறோம்!



சுய ஒழுக்கத்துடன் வாழ வேண்டும் என்பதை இது உணர்த்துகிறது!


சந்தன மரம் வளர வளர தான் மணம் கொடுக்கும்!


நாற்றத்தை கொடுப்பதில்லை!


 நறுமணத்தைதான் கொடுக்கும்!


இன்பத்திற்கு பிறரையும் துன்பத்திற்கு இறைவனையும் பழிப்பதை தவிர்க்க வேண்டும்!


எண்ணம் ,சொல் ,செயல் இவைகளில் சரியாக இருப்போம்!


பெ.திருமுகம்

மணமேல்குடி

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News