news Breaking News
clock

கிராமத்து காதல் கவிதை

கிராமத்து காதல் கவிதை



மையல் கொண்டேன் - உன்

மை விழிகளிலே!

மான் விழியாலே - எனை மயக்கிட்டாயே - புள்ள! 

ரெட்டை ஜடை அழகோ

றெக்க முளைக்க வைக்குதடி 

கை வளையல் அழகோ

கிறுக்கு புடிக்க வைக்குதடி!


ஆத்தோரம் குடத்தோடு 

அக் கரையில் நிக்கும் உன்னை

ஓரக் கண்ணால நா பார்க்க 

உதட்டோரம் நீ சிரிக்க! தினமும் காலையில உனை ரசிக்க 

திருட்டுத் தனமாய் நா வாரேன் 

தினமும் உனை பார்த்ததும்

திருவிழா கோலம் யெ மனசுல! 


சம்மதனு சொல்லு புள்ள

ஜாதி ஜனத்தை கூட்டிக்கிட்டு 

பாக்கு வெத்தல எடுத்துக்கிட்டு 

பரிசம் போட நா 

வாரேன்!

சமயம் பார்த்து உன் 

ஆத்தா கிட்ட சொல்லி

சம்மதம் வாங்கி வாயேன்

சாயங்காலம் வரை நா காத்துகிடக்கிறேன் புள்ள!


ஏய் புள்ள கேட்டுச்சா 

என் பேச்சை நீ கேட்பாய்யா! சட்டுபுட்டுன்னு நீ சொல்லு 

சரின்னு சம்மதம் சொல்லு

காலம் நேரத்தோட

கல்லாணம் பண்ணிகிட்டு

புள்ள குட்டி பெத்துக்கிட்டு

பொறுப்பாய் வாழ்வோம் புள்ள!


மனசு துடிக்குது

பாவி உன்னை தினமும் நினைச்சி

ராவுல படுத்தா தினமும்

ராசாத்தி நீ தான் என் கனாவுல! 


கண்டாங்கி சேலை கட்டிகிட்டு 

கெளித்தி மீனை எடுத்துக்கிட்டு 

வரப்பு ஓரம் நீ வார 

வஞ்சி ஓ கொள்ளழகு என்னை 

தூங்க விடமாட்டுங்குதே!

உன் நெனப்பு என்னை

கிறுக்கு பிடிக்க வைக்குதடி

கிறுக்கு பிடிக்க வைக்குதடி!



பா கலைமகள் 

விழுப்புரம்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News