திருவள்ளூரில் 377 திட்டப்பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் துணை முதலமைச்சர் -

திருவள்ளூரில் 377 திட்டப்பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் துணை முதலமைச்சர் -


திருவள்ளூர்: தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (24.11.2025) திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு நகராட்சி சுந்தரசோழபுரத்தில் நடைபெற்ற அரசு விழாவில் 333.26 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முடிவுற்ற 377 திட்டப்பணிகளை திறந்து வைத்து, 137.38 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 211 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 1,12,294 பயனாளிகளுக்கு 1000.34 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.


இவ்விழாவில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆற்றிய உரை; இன்றைக்கு திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெறுகின்ற இந்த பிரம்மாண்டமான நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உங்களையெல்லாம் சந்திப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகின்றேன், பெருமையடைகின்றேன்.


பல்வேறு மாவட்டங்களுக்கு செல்கின்றேன். வேறு எந்த மாவட்டத்திலும் இல்லாத வகையில், நம்முடைய திருவள்ளுர் மாவட்டத்தில் இன்றைக்கு மட்டும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான பயனாளிகளுக்கு சுமார் 1,500 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை நம்முடைய முதலமைச்சர் வழங்க சொல்லியிருக்கிறார்கள்.


அதில், சுமார் 325 கோடி ரூபாய் மதிப்பிலான முடிவுற்ற பணிகளை இன்றைக்கு திறந்து வைத்திருக்கின்றோம், 137 கோடி ரூபாய் மதிப்பில் புதிய பணிகளை இன்றைக்கு தொடங்கி வைத்திருக்கின்றோம்.


இங்கே ஒரு முக்கியமான விஷயத்தை உங்களிடம் நான் குறிப்பிட்டு சொல்லவேண்டும். இந்தியாவிலேயே நீர்நிலையில் தன்னிறைவு பெற்ற ஒரு ஊராட்சியாக, இந்த மாவட்டத்தில் உள்ள பாலாபுரம் ஊராட்சி, ஒன்றிய அரசின் விருதை சமீபத்தில் பெற்றுயிருக்கின்றீர்கள்.


அதற்காக உழைத்த மாவட்ட நிர்வாகத்துக்கும், அரசு அதிகாரிகளுக்கும், அலுவலர்களுக்கும், இதனை சாத்தியப்படுத்த ஒத்துழைத்த பொது மக்களுக்கும், குறிப்பாக பாலாபுரம் ஊராட்சியைச் சேர்ந்த பொதுமக்கள் அத்தனைபேருக்கும் இந்த நேரத்தில் என்னுடைய வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் நான் தெரிவித்துக் கொள்கின்றேன்.


எந்த ஒரு மனிதனுக்கும், உண்ண உணவு, உடுத்த உடை, இருக்க இடம் என்பது ஒரு அடிப்படை தேவை. இந்த தேவைகளை பூர்த்தி செய்ய பார்த்து பார்த்து திட்டங்களை தீட்டியவர்தான் நம்முடைய முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள்.


குறிப்பாக, கலைஞர் அவர்கள்தான் ஊருக்கு ஊர், தெருவுக்கு தெரு ரேஷன் கடைகளை திறந்து வைத்தார். இன்றைக்கு தமிழ்நாட்டில் உணவுப் பற்றாக்குறை, உணவுப் பஞ்சமே இல்லை என்ற நிலைமையை உருவாக்கியவர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள். அதற்கு அடையாளமாக தான், இன்றைக்கு இந்த நிகழ்ச்சியில் மட்டும் 2,000 பேருக்கு ரேஷன் அட்டை கொடுக்க இருக்கின்றோம்.


முன்னாடி எல்லாம், ரேஷன் கார்டு வாங்குவதற்கு மக்கள் அவதிப்பட வேண்டும், நடையாக நடப்பார்கள். ஆனால், இப்போது நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில், “உங்களுடன் ஸ்டாலின் முகாமை” நம்முடைய முதலமைச்சர் நடத்த உத்தரவிட்டிருந்தார்கள். அந்த முகாமில் அரசே மக்களைத் தேடி வந்து ரேஷன் கார்டு, பட்டா, அரசு சான்றிதழ்கள் என்று பல சேவைகளை செய்து கொடுத்துள்ளது.


அதனுடைய தொடர்ச்சியாகத் தான், இன்றைக்கு இந்த நிகழ்ச்சியில் மட்டும் சுமார் 37 ஆயிரம் பேருக்கு வீட்டு மனைப் பட்டாக்களை கொடுக்க இருக்கின்றோம். இது மிகப் பெரிய ஒரு சாதனை, மகிழ்ச்சியான தருணம்.


சமீபத்தில் கூட, இந்த மாவட்டத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் நம்முடைய முதலமைச்சர் கலந்து கொண்டு சுமார் 65 ஆயிரம் பேருக்கு வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கினார்.


இப்படி இந்த நான்கரை வருடத்தில் மட்டும் தமிழ்நாடு முழுவதும் சுமார் 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப் பட்டாக்களை நம்முடைய அரசு வழங்கி இருக்கின்றது. இது மிகப் பெரிய ஒரு சாதனை.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%