💏திருமணம் என்பது ஆண், பெண் மட்டும் இணைவதல்ல. இரண்டு குடும்பங்களும் சேர்ந்தே இணைவதுதான் திருமணம். இருபாலினருக்கும், அவரது பெற்றோரும், அவர்களது சார்பில் அறிவுரைகளைக் கூறி அரவணைப்பது நல்லதோர் உறவின் தொடக்கமாகும். பெரியவர்கள், திருமண தம்பதிகள் இருவரும் அடுத்தடுத்த ஜென்மங்களிலும் மனம் ஒத்து வாழ வேண்டும் என்ற நோக்கத்துடன் திருமணத்தை ஆயிரம் காலத்துப் பயிர் என்று குறிப்பிட்டனர்.
💏திருமணம் என்பது ஓர் ஆணும், ஒரு பெண்ணும் இணைந்து இல்லறம் மேற்கொள்ள நடத்தப்பெறும் ஒரு வாழ்க்கை ஒப்பந்தம் ஆகும். ஓர் ஆணும், பெண்ணும் சேர்ந்து ஒருவருக்கொருவர் கட்டுப்பட்டு, அவர்களது வாழ்க்கையைக் கூட்டுப்பொறுப்பில் நடத்துவதற்கு பலர் அறிய செய்துகொள்ளும் செயலே திருமணம் எனப்படும்.
💏திருமண சடங்கில் ஏலக்காய், கிராம்பு, சாதிக்காய், கற்பூரம் எனும் நறுமணப் பொருட்களுடன், வெற்றிலை, சந்தனம், மஞ்சள், உளுந்து, நெல், உப்பு, மலர் ஆகிய மங்கலப் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றுள் அரிசியும், மஞ்சளும் கலந்ததுதான் அட்சதை. இந்த அட்சதையை பெரும்பாலும் மணமக்களை வாழ்த்துவதற்கு பயன்படுத்துகின்றனர்.
💏அட்சதை என்பது முனை முறியாத அரிசி ஆகும். அதேப்போல் மங்கலங்களை குறிப்பது மஞ்சள். அரிசியையும், மஞ்சளையும் இணைத்து, உற்றார் உறவினர்கள், பெரியோர், நண்பர்கள் என அனைவரும் மணமக்களை வாழ்த்தும்போது, மணமேடைக்கு அருகே வந்து ஒருவர் பின் ஒருவராக மணமக்களை அட்சதை தூவி ஆசி வழங்குவர்.
💏திருமணங்களில் மணமக்களை வாழ்த்துவதற்காக பயன்படுத்தும் அட்சதை மிகவும் சக்திக நிறைந்தது. உதாரணமாக, அரிசியை சற்றுநேரம் உங்கள் கைகளில் வைத்திருந்தால், அந்த அரிசி உங்கள் உணர்வையும், சக்தியையும் கிரகித்துக் கொள்ளும் தன்மைக் கொண்டது. அதனால்தான் அரிசியை கைகளில் வாங்கவும் கூடாது. கொடுக்கவும் கூடாது என்று பெரியவர்கள் சொன்னார்கள்.
💏அத்தகைய சிறப்புகள் பெற்ற அரிசியுடன் மங்கலங்களை அளிக்கக்கூடிய மஞ்சளைச் சேர்த்து மணமக்கள் மீது அட்சதையாகப் போடும்போது, அட்சதைப் போடுபவர்களின் மூலமாக நல்ல உணர்வுகள் மணமக்களை சென்றடைகிறது. இவ்வாறு அட்சதையால் ஆசீர்வதிக்கப்பட்டு செய்யப்படும், திருமணம் மற்றும் தொழில்கள், சுபகாரியங்கள் அனைத்தும் வெற்றிமேல் வெற்றி பெற்று, சகல நலன்களையும் அடையும் என்பது நிச்சயம் ஆகும்.
💏திருமண சடங்கில் வெற்றிலை, சந்தனம், மஞ்சள், மலர் ஆகிய மங்கலப் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றுள் அரிசியும், மஞ்சளும் கலந்ததுதான் அட்சதை. தாலி கட்டும்போது தூவப்படும் அட்சதை மணமக்கள் பெரியவர்களின் வாழ்த்தை பெறவும், தீய சக்திகளிடம் இருந்து காத்து வளமான வாழ்க்கை அமைவதற்கும் ஆசீர்வதிப்பதாகும்.
Thanks and regards
A s Govinda rajan
திருமணத்தில் மூன்று முடிச்சு போடுவது ஏன்?
தாலி கட்டுதல் :
💏திருமணத்தின்போது கோவில் அல்லது மண்டபத்தில் மணமகன் மற்றும் மணமகள் அழைப்பிற்கு பிறகு, குறித்த முகூர்த்த நேரத்தில் மணமகன் பட்டு உடைகள் உடுத்தி திருமணம் செய்யும் இடத்தில் அமர வேண்டும். பின் முகூர்த்த புடவை உடுத்தி மணமகளை மணமகனின் வலது புறத்தில் அமர வைப்பர். இருவரும் கிழக்கு நோக்கி அமர்வர். முகூர்த்த நேரத்தில் மணமகன் எழுந்து மணமகளின் வலப்புறம் சென்று வடக்கு நோக்கி நின்று இறைவனை பிரார்த்தித்து அனைவராலும் ஆசிர்வதித்து கொடுக்கப்படும் தாலியை வாங்கி கெட்டிமேளம் முழங்க, அனைவரும் அட்சதை தூவி ஆசிர்வாதம் செய்ய, மணமகன் வீட்டார் தேங்காய் உடைக்க, மணமகளின் பின்னால் ஒருவர் தீபம் காட்ட மணமகன், மணமகளின் கழுத்தில் மூன்று முடிச்சு போட்டு தாலியை கட்டுவார்.
💏தாலி கட்டிய பின் மணமகள் கழுத்தில் உள்ள மாங்கல்ய கயிற்றின் மூன்று மூடிச்சுகளின் மீது இறைவனை வேண்டிக்கொண்டு திருநீறு மற்றும் குங்குமத்தை மணமகன் வைப்பார். பின் திருமாங்கல்யத்தின் மீதும் குங்குமம் வைப்பார். அவள் தன் கணவனுக்கே உரியவள் என்பதை எடுத்துக்காட்டவே குங்குமத்தை நெற்றியில் வைப்பர். தாலியில் சிவலிங்கம், விநாயகர் அல்லது லட்சுமியின் திருவுருவம் அமைத்தல் நல்லது.
திருமணத்தில் மூன்று முடிச்சு போடுவது ஏன்?
💏திருமணம் என்பது ஆயிரங்காலத்து பயிர் ஆகும். ஒரு திருமணத்தில் ஆயிரம் ஆயிரம் சடங்குகள் இருந்தாலும் அதில் தாலி கட்டுவதற்கு தான் அதிக முக்கியத்துவம் உள்ளது. இதனை மாங்கல்ய தாரணம் என்று கூறுவர். திருமணத்தின்போது மணமகன் மணமகளின் கழுத்தில் திருமாங்கல்ய சரடை கொண்டு மூன்று முடிச்சு போடுகின்றனர். இந்த மூன்று முடிச்சுகளும் ஒரு பெண் எப்போதும் தெய்வீக உணர்வுடன் இருக்க வேண்டும் என்பதற்காகவும், எண்ணம், சொல், செயல் மூன்றாலும் தூய்மைமிக்கவளாக திகழ வேண்டும் என எத்தனையோ காரணங்களை உணர்த்துகின்றது.
முதல் முடிச்சு :
💏இறைவன் மற்றும் தேவர்களை சாட்சியாக வைத்து போடப்படுவது முதல் முடிச்சு ஆகும். இது கணவனுக்கு கட்டுப்பட்டவளாக இருக்க போடப்படுகிறது.
இரண்டாம் முடிச்சு :
💏இரண்டாம் முடிச்சு முன்னோர்களை சாட்சியாக கொண்டு போடப்படுகிறது. இது தாய் தந்தையருக்கும், புகுந்த வீட்டிற்கும் கட்டுப்பட்டவளாக இருக்க போடப்படுகிறது.
மூன்றாம் முடிச்சு :
💏பெற்றோர்கள் மற்றும் திருமணத்திற்கு வந்திருப்பவர்களின் சாட்சியாக போடப்படுவது மூன்றாவது முடிச்சு ஆகும். இது தெய்வத்திற்கு பயந்தவளாக இருக்க போடப்படுகிறது.
Thanks and regards
A s Govinda rajan
முகூர்த்தக்கால் ஊன்றுதல் !
🎉இல்லத்தில் திருமணம் நிச்சயக்கப்பட்ட நாள் முதல் திருமணம் முடியும் வரை பலவிதமான சடங்குகள் செய்கிறோம். இந்த சடங்குகளில் மிக முக்கியத்துவம் வாய்ந்தது முகூர்த்தக்கால் நடுதல் ஆகும். இதை பந்தக்கால் நடுதல் என்றும் கூறுவர். இந்த பந்தக்கால் நடும் விழா பிரம்ம முகூர்த்தம் அல்லது ஏதேனும் முகூர்த்த நாளில் நல்ல நேரம் பார்த்து திருமணத்திற்கு முன்பு நடைபெறும்.
🎉இந்த சடங்கில் தனித்தனியே மணமகன் மற்றும் மணமகள் வீட்டில் வடகிழக்கு பகுதியில் பந்தக்கால் ஒன்று நடப்படும். இந்த பந்தக்கால் நடும் விழாவில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது கல்யாண முருங்கை மரம் ஆகும். சில வீடுகளில் கல்யாண முருங்கைக்கு பதிலாக பால மரமும் நடுகின்றனர்.
பந்தக்கால் நடும் முறை :
🎉கல்யாண முருங்கை மரத்தில் ஒரு கிளையை வெட்டி அதில் உள்ள இலைகளை அகற்றிவிட்டு அந்த மரத்தின் நுனியில் 5 மாவிலைகளை மஞ்சள் பூசிய கயிற்றால் கட்டி, இடையில் ஒரு மஞ்சள் பூசிய வெள்ளைத் துணியில் ஒரு செப்புக்காசு முடிந்து கட்டிவிட வேண்டும்.
🎉உறவினர்கள் அனைவரையும் அழைத்து வீட்டில் உள்ள பெரியவர் அந்த மரத்தை நட வேண்டிய இடத்தில் வைத்து, பின் அதற்கு தேங்காய் உடைத்து சாம்பிராணி கற்பூரம் காட்டி பூஜை செய்ய வேண்டும். அதனடியில் நவதானியத்தோடு நீர் மற்றும் பால் ஊற்றி மரத்திற்கு திருநீறு, சந்தனம், குங்குமம் வைக்க வேண்டும்.
🎉மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைத்து வெற்றிலை பாக்கு மற்றும் பழம் வைத்து தேங்காய் உடைத்துத் தீபம் காட்டி பின் பந்தக்காலை நிலத்தில் ஊன்றுவர். பந்தக்கால் நட்ட பிறகு பந்தல் போடும் வேலையும் தொடர்ந்து செய்வர். பின் உறவினர்களுடன் சேர்ந்து இருவீட்டாரும் அவரவர் வீட்டில் விருந்துண்டு மகிழ்வர்.
🎉முகூர்த்தக்கால் ஊன்றிய பின் இருவீட்டாரும் திருமணச் சடங்குகள் முடியும் வரை எந்தவிதமான துக்க நிகழ்ச்சிகளிலும் பங்குபெறுதல் கூடாது.
பந்தக்கால் நடும் முறை வந்தது எப்படி?
🎉முற்காலத்தில் திருமணம் செய்யும்போது அரசனுக்கும் அழைப்பிதழ் அனுப்புவார்கள். அப்படி அழைப்பு தந்த அனைத்து திருமணத்திற்கும் அரசனால் செல்ல இயலாது. எனவே, அவர் தனது ஆணைக்கோலை அனுப்பி வைப்பார். அரசு ஆணைக்கோல் மருவி அரசாணைக்கால் ஆகிவிட்டது. அன்று ஆணைக்கோல் வந்துவிட்டால் அரசனால் அங்கீகரிக்கப்பட்டது. ஆகவே அத்திருமணம் அங்கீகாரம் பெற்றுவிடுகிறது. இதுவே இன்று திருமணப் பந்தலில் கல்யாண முருங்கை மரக்கிளை ஒன்றை வைத்து அதனை வழிபடுகின்றனர்.
Thanks and regards
A s Govinda rajan
திருமண அழைப்பிதழ்களை தாம்பூலத்தட்டுகளில் வைத்துக்கொடுப்பது ஏன்?
👉திருமண வாழ்க்கை என்பது அன்பு, உதவி, அரவணைப்பு, ஆறுதல், நம்பிக்கை போன்ற பல பகுதிகள் இணைந்ததாகும். இந்த திருமண வாழ்க்கையில் ஒன்றாக இணையப்போகும் மணமக்களின் திருமணத்திற்கு வருகை புரியுமாறு நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் மற்றும் சுற்றத்தில் உள்ள அனைவருக்கும் வேண்டுகோள்விடுக்கும் ஒரு அழைப்பு கடிதம் தான் திருமண அழைப்பிதழ் ஆகும்.
👉சாதி, மத வேறுபாடின்றி அனைத்து சமூகத்தினராலும் கடைபிடிக்கக்கூடிய ஒரு திருமணச் சடங்காக திருமண அழைப்பிதழ் வழங்குவது நடைமுறையில் இருந்து வருகிறது. ஒவ்வொருவரும், தங்களுடைய வசதிக்கு ஏற்றவாறு திருமண அழைப்பிதழை வடிவமைத்து வழங்குவார்கள்.
👉அவ்வாறு திருமண அழைப்பிதழை வடிவமைத்து, திருமண அழைப்பிதழை நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் மற்றும் சுற்றத்தில் உள்ள அனைவருக்கும் வழங்கும்போது வெறும் திருமண அழைப்பிதழ் மட்டுமல்லாமல், வெற்றிலை, பாக்கு, பூ, குங்குமம் உள்ளிட்டவைகளையும் வழங்கும் பழக்கம் ஒரு சிலரிடம் இருக்கிறது.
👉சிலரிடம் திருமண அழைப்பிதழுடன் நாணயம் ஒன்றையும் இணைத்து வழங்கும் பழக்கம் உள்ளது. அவ்வாறு திருமண அழைப்பிதழ் கொடுக்கும்போது திருமண அழைப்பிதழ்களை கையில் கொடுக்காமல் தாம்பூலத் தட்டுகளில் வைத்துக் கொடுப்பதற்கான காரணம் என்ன
👉உதாரணமாக, ஒரு சிலர் திருமண அழைப்பிதழ்களை மட்டுமல்ல, ஏதேனும் ஒரு பொருளை கடனாக கொடுக்கும்போதும் கூட தட்டில் வைத்துதான் கொடுப்பார்கள். அதேபோல் ஒருவர் மற்றொருவருக்கு அரிசி, நெல் முதலானவற்றை கொடுக்கும்போது முறத்தில் வைத்துதான் கொடுப்பார்கள்.
👉இவ்வாறு கொடுப்பவரும், வாங்குபவரும் பொருளாதார அளவில் உயர்ந்த நிலையில் இருந்தாலும், தாழ்ந்த நிலையில் இருந்தாலும் வேற்றுமை மனதிலில்லை என்பதை காட்டுவற்காகவே அவ்வாறு தட்டில் வைத்துக் கொடுத்தனர்.
👉மேலும் ஒரு பொருளைக் கொடுக்கும்போது வெறும் கையால் கொடுத்தால், கொடுப்பவரின் கை மேலேயும், வாங்குபவரின் கை கீழேயும் இருக்கும். இப்படிப்பட்ட ஏற்றத்தாழ்வுகள் இருவருடைய மனதிற்குள்ளும் தோன்றக்கூடாது என்பதற்காகவே எப்பொருளை கொடுத்தாலும், நம் முன்னோர்கள் தட்டில் வைத்துக் கொடுப்பதை பழக்கமாகக் கொண்டிருந்தனர்.
👉இதன் காரணமாகத்தான் திருமண அழைப்பிதழ் கொடுக்கும்போது அழைப்பிதழை தாம்பூலத்தட்டில் வைத்துக் கொடுக்கின்றனர். மேலும், திருமண அழைப்பிதழ் தாம்பூல தட்டில் வைத்துக் கொடுக்கப்போகும்போது, அதனுடன் வெற்றிலை, பாக்கு, பூ மற்றும் குங்குமம் உள்ளிட்டவற்றை வைத்து வழங்குவது சிறப்பாகும்.
Thanks and regards
A s Govinda rajan
Chennai
600024