திருப்பத்தூர் வளர்ச்சிப் பணிகள்: மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆர்த்தி ஆய்வு
Aug 04 2025
12

திருப்பத்தூர், ஆக. 2–
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்புர் நகராட்சி தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவினை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் டாக்டர்.எம்.ஆர்த்தி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து அப்பள்ளியில் உள்ள ஸ்மார்ட் வகுப்பறையை பார்வையிட்டு, ஆய்வு செய்து, இப்பள்ளியில் பயிலும் மாணவ மாணவியர்களின் கற்றல் திறன் கற்ப்பித்தல் குறித்து ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார்.
ஆம்பூர் நகராட்சி வார்டு எண்.25 முகமத் புராக் குருக்கு தெரு பகுதியில் 210 மீட்டர் நீளத்தில் ரூ.11 இலட்சம் மதிப்பீட்டில் சாலை சீரமைப்பு பணியினையும், ஆம்புர் வார்டு எண்.13 கஸ்பா பி மெயின் ரோடு பகுதியிலும் பழுதடைந்த சாலை சரி செய்தல் வார்டு எண்.15 மற்றும் கஸ்பா ஏ ராஜா தெரு பகுதியிலும் சாலை சரி செய்யும் பணியையும், இப்பகுதியில் 44 இடங்களில் சரி செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தொடர்ச்சியாக காதர்பேட்டை மெயின் ரோடு சாலையில் சாலை பழுதுபார்த்தல் பணி நடைபெற்று வருவதை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உதயேந்திரம் பேரூராட்சி தேவமங்கலம் பகுதியில் நகர்ப்புற சாலை மேம்பாடு திட்டத்தின் கீழ் ரூ.65 இலட்சம் மதிப்பீட்டில் 1.65 கிலோமீட்டர் தொலைவில் சிமெண்ட் சாலை பழுது பார்க்கும் பணி நடைபெற உள்ளதை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து, கொண்டகிந்தனப்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளி மாணவ, மாணவியர்களின் கற்றல் திறன் கற்பித்தல் குறித்து ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார்.
இந்த ஆய்வுகளின் போது மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.நாராயணன், ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் சங்கீதா, நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் முரளி, உதவி செயற்பொறியாளர் சிவசங்கரன், அனைத்து நகராட்சி ஆணையர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அனைத்து துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?