திட்டக்குடி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம் நடந்தது.
கடலூர், டிச.18-
கடலூர் மாவட்டம் திட்டக்குடி நகராட்சி பேருந்து நிலையம் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட வியாபாரிகள் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக காய்கறி கடை நடத்தி வந்தனர் இந்த நிலையில் அந்தக் கடைகளை இடித்து விட்டு மீண்டும் வியாபாரிகளுக்கு புதிதாக கட்டப்படும் கட்டிடத்தில் கடைகளை வழங்கப்படும் என உத்தரவுவாதத்தோடு பழைய கட்டிடங்கள் இடிக்கப்பட்டு தற்போது
புதிதாக கட்டப்பட்டுள்ள 35க்கும் மேற்பட்ட கடைகளை ஏலம் விடும் பணி நடைபெற்றது இந்த ஏலத்தில் காலம் காலமாக வியாபாரம் செய்து வந்த வியாபாரிகள் பங்கேற்க முடியாத வகையிலும் சிலர் ஆதாயம் அடையும் வகையில் அனைத்து கடைகளும் ஏலம் விடும் நடவடிக்கையில் நகராட்சி நிர்வாகம் ஈடுபடுவதை கண்டித்து வியாபாரிகள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் மேலும் நகராட்சி அலுவலகத்தை வணிகர் சங்க நிர்வாகிகள் ராமன் சக்திவேல் தலைமையில் முற்றுகையிட்டு நகராட்சி அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு நிலவியது தொடர்ந்து ஆணையர் முரளிதரன் மற்றும் அதிகாரிகள் மூலம் வியாபாரிகள் சங்கத்திற்கு மறைமுக ஏலம் விடப்பட்டது.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?