தாராபுரம் வழக்கறிஞர் கொலை வழக்கு: 3 மாதங்களில் விசாரணை அறிக்கை அளிக்க ஐகோர்ட் உத்தரவு
Aug 07 2025
14

குடும்ப முன்பகையால் தாராபுரம் வழக்கறிஞர் முருகானந்தம் கொலை செய்யப்பட்ட வழக்கை மேற்கு மண்டல ஐஜி மேற்பார்வையில் விசாரித்து 3 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய போலீஸாருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத் தைச் சேர்ந்த சுமித்ரா தேவி (67) சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், எனது கணவர் லிங்கசாமி ஓய்வு பெற்ற ராணுவ வீரர். சொத்துதகரா றில் எனது கணவர் கடந்த 1999-ம் ஆண்டு ஜூலை 28 அன்று தலை துண்டித்து கொலை செய்யப்பட் டார். இந்த கொலைவழக்கில் எனது கணவரின் தம்பி தண்டபாணி கைது செய்யப்பட்டார். ஆனால் சந்தேக அடிப்படையில் விடுவிக்கப்பட் டார். ஜூலை 28 அன்று மாற்றுத் திறனாளியான வழக்கறிஞராக தொழில் செய்துவரும் எனது மகன் முருகானந்தத்தையும் தண்டபாணி கூலிப்படை மூலமாக எனது கணவர் இறந்த அதே தேதியில் கொலை செய்துள்ளார்.
எனது மகன் மாற்றுத்திறனாளிகளுக்கு ஆதரவாக பல்வேறு உத்தரவு களைப் பெற்று கொடுத்துள்ளார். போலீஸாருக்கு எதிராகவும் பல வழக்குகளில் ஆஜராகியுள்ளார். தண்டபாணி நடத்தி வரும் பள்ளி நிலம் தொடர்பாக உயர் நீதிமன்றத் தில் வழக்கு தொடர்ந்தான் என்ற காரணத்துக்காக எனது மகனையும்
அவர் அதிகாரிகளின் துணையுடன் கொலை செய்துள்ளார். கடந்த 2020-ம் ஆண்டு போலீஸார் எனது மகனை பொய் வழக்கு ஒன்றில் கைது செய்தனர். எனது மகன் தொடர்ந்த வழக்கை விசாரித்த மனித உரிமை ஆணையம் ரூ.5 லட்சத்தை இழப்பீடாக எனது மகனுக்கு வழங்க வேண்டு மென சம்பந்தப்பட்ட போலீஸாருக்கு உத்தரவிட்டது. அந்த உத் தரவை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது.
இந்த சூழலில் எனது மகனை கூலிப்படையினர் வெட்டி கொலை செய்துள்ளனர். தடுக்க வந்த மற்றொரு வழக்கறிஞரையும் வெட்டியுள்ளனர் எனவே எனது மகன் கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும், எனக்கோரியிருந்தார்.
அதையடுத்து நீதிபதி, வழக்கறிஞர் முருகானந்தம் கொலை வழக்கை மேற்கு மண்டல ஐஜி தனது மேற்பார்வையில் விசாரிக்க வேண்டும் என்றும், 3 மாதங்களுக்குள் இந்த வழக்கின் குற்றப்பத்திரிகையை தாராபுரம் போலீஸார் தாக்கல் செய்து அதன் அறிக்கையை உயர் நீதிமன்றத்திலும் தாக்கல் செய்ய வேண்டும். என உத்தரவிட்டுள்ளார்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?