
பாங்காக்,
தென்கிழக்கு ஆசிய நாடுகளான தாய்லாந்து மற்றும் கம்போடியா நாடுகள் இடையே கடந்த மே மாதத்தில் மோதல் போக்கு ஏற்பட்டது. அப்போது, கம்போடியா ராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டார். இதனால், இரு நாடுகளின் இடையேயும் பதற்றம் தொற்றியது.
இந்த சூழலை தேசியவாதிகள் பெரிதுபடுத்தினர். இதனால், பதற்றம் இன்னும் அதிகரித்தது. இந்நிலையில், இரு நாடுகளை சேர்ந்த ராணுவ வீரர்களும் எல்லை பகுதியில் இன்று மோதி கொண்டனர். துப்பாக்கி சூடும் நடத்தப்பட்டது.
இந்த சம்பவத்தில் குடிமக்களில் 9 பேர் பலியானார்கள். இதுபற்றி தாய்லாந்து ராணுவம் வெளியிட்ட செய்தியில், அதிக அளவாக சி சா கெத் மாகாணத்தில் பலி எண்ணிக்கை உள்ளது. இதில், எரிவாயு நிலையத்தில் துப்பாக்கி சூடு நடந்ததில், 6 பேர் பலியானார்கள். 3 எல்லைப்புற மாகாணங்களை சேர்ந்த 14 பேர் காயமடைந்தனர் என தெரிவித்து உள்ளது.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?