ஈரோடு, டிச.15- தவெகவிற்கு போட்டி யார் என்று செங்கோட்டையன் பதில் அளித்தார்.
பெருந்துறையில் அதிமுக, திமுக என பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் 300-க்கும் மேற்பட்டோர் அக்கட்சியின் நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தலைமையில் நேற்று இணைந்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் செங்கோட்டையன் கூறியதாவது-
தவெக சார்பில் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் விருப்ப மனு வழங்குவது குறித்த தேதியை தலைவர் விஜய் அறிவிப்பார். தேசிய ஜனநாயக கூட்டணியில் சசிகலா இணைக்கப்படுவாரா? என்பதை அவர்களிடம் தான் கேட்க வேண்டும். தேர்தல் களம் என்பது எப்படி செல்லும் என யாராலும் ஊகிக்க முடியாது. பொருந்திருந்து தான் பார்க்க வேண்டும். அதிமுக - தவெக கூட்டணி அமையுமா என்று நீங்கள்(செய்தியாளர்கள்) தான் பதில் சொல்ல வேண்டும்.
தவெகவிற்கு மக்கள் சக்தி இருக்கிறது. எனவே தவெகவிற்கு போட்டி என தனிப்பட்ட முறையில் யாரையும் சொல்ல முடியாது, மக்கள் சக்தியால் விஜய் முதல்வர் ஆவார். மக்கள் சக்தியாக எதிர்கால தமிழ்நாட்டை ஆள்வதற்கு ஒரு புதிய அத்தியாயத்தை விஜய் உருவாக்குவார். ஈரோட்டில் வரும் 18 ஆம் தேதி தலைவர் விஜயின் சுற்றுப்பயணம் நடக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
==
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?