news Breaking News
clock

தவெகவில் விசிக தொண்டர்கள்: கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி

தவெகவில் விசிக தொண்டர்கள்: கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி



ஈரோடு, ஜன. 


தி.மு.க., மகளிர் மாநாட்டுக்கு, ஆயிரம் ரூபாய் பணம், இலவச சேலை கொடுத்து பெண்களை அழைத்து வந்தனர்," என த.வெ.க. நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் கே.ஏ.செங்கோட்டையன் குற்றஞ்சாட்டியுள்ளார்.


ஈரோடு அருகே உள்ள வெள்ளக்கோவிலில், த.வெ.க. அலுவலகத்தை, கட்சியின் கொங்குமண்டல அமைப்பு செயலரும், மாநில நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளருமான செங்கோட்டையன் திறந்து வைத்து, பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–


தமிழகத்தை ஆளும் சக்தி, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமிக்கு மட்டுமே உள்ளதாக, முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு சொல்வது உண்மை என்றால் கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் ஏன் தோல்வி அடைந்தார்.


கடந்த சட்டசபை தேர்தலில் அரசு ஊழியர்களை வைத்துக் கொண்டு, அவர்களுக்கு பல வாக்குறுதிகளை தந்து, தி.மு.க., வெற்றி பெற்றது. தற்போது எங்கு பார்த்தாலும், அரசு ஊழியர்களின் போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது.


திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில், பெண்களுக்காகவே ஒரு நிகழ்ச்சியை தி.மு.க., நடத்தியது. அந்த கூட்டத்துக்கு, 1,000 ரூபாய் பணம், 500 ரூபாய் மதிப்பிலான இலவச சேலை, உணவு கொடுத்து பெண்களை கூட்டி வந்தனர்.


ஆனால், ஈரோடு மாவட்டம் விஜயமங்கலத்தில் த.வெ.க., தலைவர் விஜய் பங்கேற்ற பிரசார கூட்டத்துக்கு, ஒரு ருபாய் கூட கொடுக்காமல், 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வந்தனர். இவ்வாறு செங்கோட்டையன் கூறினார்.


இதையடுத்து, காங்கேயம் அருகே உள்ள சிவன்மலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் அலுவலகத்தை திறந்து வைத்த பின், செங்கோட்டையன் கூறுகையில், "தி.மு.க.,வில், கூட்டணி கட்சிகளிடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளதை, விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் செயல்பாடு காட்டுகிறது.


த.வெ.க., கூட்டணிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி வருகிறதோ இல்லையோ, அக்கட்சி தொண்டர்கள், த.வெ.க.,வுக்கு வந்தபடி உள்ளனர்," என்றார்.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News