தந்திரம்..

தந்திரம்..



இடரில் தோன்றும்

 மந்திரச் செயல் 


தன்னைக் காக்கும் 

சில நேரம் 

 பிறரை வாட்டும்

 பல நேரம் 


சுயநல உள்ளத்தின் 

சூழ்ச்சி 


எட்டாக்கனிக்கு 

இதயம் போடும் 

 எந்திரத் திட்டம் 


இல்லாததைக் காட்டி 

 இயல்பை மாற்றி 

இன்பம் நாடும்


நண்பனைப் பகைவனாக்கும் நச்சுக்குணம்


நல்லவன் போல் வேடமிட்டு 

நயவஞ்சக குணம் மறைத்து 

நடிப்போடு வாழ்ந்திடுவார் 


நரியின் பண்பிற்குப்

பெயராகும் 

நலிந்த மனத்திற்கு

துணையாகும்

நல்ல குணம் மாற்றி

துயரம் தரும்


மனிதர் கொள்ளும்

தந்திரத்தால்

மனதில் நிம்மதி

தொலைந்து போகும்


தந்திரம் கொண்ட 

குணத்தாலே 

கொண்டது என்ன சிந்திப்போம் 


நல்ல குணத்தை 

 நாம் ஏற்று 

சிந்தையில் தூய்மை கொண்டிடுவோம் 

தந்திரம் என்றும் நிரந்தரமில்லை 

தவறென்றே ஒதுக்கிடுவோம் 


எண்ணம் என்றும் சிறந்திருந்தால் 

 ஏற்றம் என்றும் தேடி வரும். 



தமிழ்நிலா

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%