தண்ணீர் விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம்: தெலங்கானாவுக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு வேண்டுகோள்

தண்ணீர் விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம்: தெலங்கானாவுக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு வேண்டுகோள்


 

அமராவதி: தண்​ணீர் விவ​காரத்தை அரசி​ய​லாக்க வேண்​டாம் என்று தெலங்​கானா அரசுக்கு ஆந்​திர முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு வேண்​டு​கோள் விடுத்​துள்​ளார்.


கோதாவரி நதி மீது கட்​டப்​பட்டு வரும் போல​வரம் அணைக்​கட்டு கட்​டு​மானப் பணி​களை ஹெலி​காப்​டர் மூலம் முதல்வர் சந்திர பாபு நாயுடு நேற்று பார்​வை​யிட்​டார்.


பின்​னர் அவர் போல​வரத்​தில் செய்​தி​யாளர்​களிடம் பேசி​ய​தாவது: போல​வரம் அணை கட்​டு​வது குறித்து தெலங்​கானா அரசு, ஆட்​சேபம் தெரி​வித்து வரு​வது வருந்​தத்​தக்​கது. கடலில் கலக்​கும் நதி நீரை யார் வேண்​டு​மா​னாலும் உபயோகப் படுத்​திக் கொள்ளலாம். இதில் அரசி​யல் தேவையற்​றது.


தெலங்​கானா மக்களும் இதை புரிந்து கொள்​ள வேண்​டும். தெலுங்கு இன மக்கள் அனை​வரும் சமமானவர்​களே. மக்​களுக்​காக அரசி​யல் செய்​தால் நல்​லது. ஆனால், அரசி​யலுக்​காக மக்​களை அவதி​யுறச் செய்​யக்​கூ​டாது. ஆர்​டிஎஸ் பகு​தி​யில் தண்​ணீர் பிரச்​சினை வந்தபோது மகபூப் நகருக்கு நாங்​கள் தண்​ணீர் வழங்​கினோம்.


கல்​வகுர்த்​தி, தேவாதுலா அணை​களை நான்​தான் தொடங்​கி​ வைத்​தேன். சமீப​கால​மாக சிலர் பேசுவதைக் கேட்​கை​யில், பல விஷ​யங்​கள் புரி​யாத புதி​ராக உள்​ளது. தேவாதுலா அணையி​ல் இருந்து தண்​ணீர் திறந்​து​விட்​டால், அது போல​வரம் அணைக்கு வரும். கீழ்த் ​தட்​டில் உள்ள போல​வரத்​துக்கு தண்​ணீர் வரு​வது இயற்​கை. இதில் என்ன தவறு ? கோதாவரி நதி​யில் தேவைக்கேற்ற அளவுக்கு தண்ணீர் உள்​ளது.


தேவை​யான தண்​ணீரை உபயோகப்​படுத்​திக் கொள்​ளுங்​கள். உபரி நீரை நாகார்​ஜுன சாகர், சைலம் போன்ற அணை​களி​லும் நிரப்​பிக் கொள்​ளுங்​கள். கிருஷ்ணா நதிக்கு நீர்​வரத்து குறை​யும்​போது, அதன் மேல்​பாகத்​தில் அணை கட்​டி​னால் நஷ்டம் வரும்.


கிருஷ்ணா டெல்டா பகு​தி​களைக் காப்​பாற்றி கோதாவரி​யுடன் கிருஷ்ணா நதி நீரை இணைத்​தால்​தான் இந்​தப் பிரச்​சினைக்​குத் தீர்வு காண முடி​யும். ஒரு பொய்யை நூறு முறை சொன்​னாலும் உண்​மை​யா​காது. கடலில் வீணாக கலக்​கும் நீரை, தடுத்து நிறுத்தி​னால் உங்​களுக்​குத்​ தான் (தெலங்​கா​னா) நஷ்டம்.


ஒய்​எஸ்​ஆர் காங்​கிரஸ் ஆட்​சிக் ​காலத்​தில் போல​வரம் அணையை கண்​டு​கொள்​ள​வில்​லை. இதனால் 6 ஆண்​டு ​காலம் நாம் நஷ்டம் அடைந்​தோம். தற்​போது மீண்​டும் அப்​பணி​கள் போர்க்​கால அடிப்படை​யில் நடை​பெற்று வரு​கின்​றன. விரை​வில் போல​வரம் அணை நாட்​டுக்கு அர்ப்​பணிக்க முடி​யும். இவ்​வாறு அவர் பேசினார்​.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%