தக்காளி சாம்பார்

தக்காளி சாம்பார்



தேவையான பொருள்கள்


சாம்பார் வெங்காயம் 15

சாம்பார் பொடி 2 ஸ்பூன்

தேவையான கல் உப்பு

இரண்டாக நறுக்கிய தக்காளி 5

வேகவைத்த பருப்பு அரை ஆழாக்கு (து.பருப்பு/பாசி பருப்பு)


அரைப்பதற்கு


ஒரு நெல்லிக்காய் அளவு புளி

இரண்டு டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல்

ஒரு துண்டு இஞ்சி

நான்கு பல் பூண்டு

இரண்டு தக்காளி

இரண்டு வற்றல் மிளகாய்

(எல்லாவற்றையும் சேர்த்து தண்ணீர் விட்டு நைசாக அரைத்துக் கொள்ளவும்)


ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெயில் கடுகு, சீரகம், சோம்பு, கறிவேப்பிலை, ஒரு காய்ந்த மிளகாய் கிள்ளியது, பெருங்காயம், மஞ்சள் தூள் தாளித்து சாம்பார் வெங்காயம், உப்பு மற்றும் தக்காளி சேர்த்து நன்கு வதக்கி வெந்தபின் அரைத்த விழுதை சேர்த்து வதக்கி சிறிது மூடி வைக்கவும். பிறகு பருப்பு சேர்த்து தேவையான நீர் சேர்த்து கொத்துமல்லித் தழை தூவி பரிமாறவும். நீங்களும் செஞ்சு அசத்துங்க. நன்றி.


வி.பிரபாவதி 

மடிப்பாக்கம்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%