தகடூர் அதியமான் வரலாற்றுச் சங்கத்தின் 6 ஆம் ஆண்டு பொதுக்குழு கூட்டம்

தகடூர் அதியமான் வரலாற்றுச் சங்கத்தின் 6 ஆம் ஆண்டு பொதுக்குழு கூட்டம்

தகடூர் அதியமான் வரலாற்றுச் சங்கத்தின் 6 ஆம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் இன்று சங்கஅலுவலகத்தில் நடைபெற்றது.


இக் கூட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் முனை. தி. சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். சங்கத்தின் செயலாளர் மரு. இரா. செந்தில் அவர்கள் வரவேற்றார்.


பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தருமபுரி மாவட்டத்தில் உள்ள பழங்கால சின்னங்களான ஆதனூர் பெருங்கற்கால கல்வட்டம்,பங்குநத்தம் கிராமத்தில் பெருங்கற்கால கல்வட்டங்கள் ஆகியவற்றை,பாதுகாக்கப்பட்ட சின்னமாக அறிவித்து நடவடிக்கை எடுத்தமைக்காக மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கும், மாண்புமிகு தொல்லியல் துறை அமைச்சர் அவர்களுக்கு நன்றி


திருமல்வாடியில் உள்ள குத்துக்கல், கம்பைநல்லூர் வெதரம்பட்டி என்ற ஊரில் உள்ள ஏழுசுத்துக் கோட்டை, தென்கரைக் கோட்டை மதில், அகழி, ஆயுதக்கிடங்கு, கோயில்கள் ஆகியவற்றை பாதுகாகப்பட்ட சின்னங்கள் ஆக அறிவிக்க தொடர் நடவடிக்கை மேற்கொள்வது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

இரும்பு குறித்து கருத்தரங்கம் நடத்துவது என்றும், 

தகடூர் பகுதி அகழாய்வுகள் குறித்து கருத்தரங்கம் நடத்துவது என்றும்

காஞ்சி மாநகரை மையப்படுத்தி தொல்லியல் சுற்றுலா நடத்துவது என்றும்

7 ஆவது தருமபுரி புத்தகத் திருவிழாவில் சங்கத்தின் சார்பில் பங்கெடுத்து மாலை நேர கருத்தரங்கு நடத்துவது என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


நிறைவாக பொருளாளர் வெ.ராஜன் நன்றி தெரிவித்தார். இக் கூட்டத்தில் ஆசிரியர் கூத்தப்பாடி பழனி, மு. கார்த்திகேயன், இளம்பரிதி, சிசுபாலன், திருநாவுக்கரசு, சம்பத், உதய குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%