லாகூர்,
பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணம் ஹபீஸ்பாத் நகரில் டியூசன் சென்டர் செயல்பட்டு வருகிறது. இந்த டியூசன் சென்டரில் நேற்று மாலை 9 மாணவர்கள், 2 ஆசிரியர்கள் என மொத்தம் 11 பேர் வகுப்பறையில் இருந்தனர்.
அப்போது, டியூசன் சென்டரின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் வகுப்பறையில் இருந்த 2 ஆசிரியர்கள் 5 மாணவர்கள் என மொத்தம் 7 பேர் உயிரிழந்தனர். எஞ்சிய 4 மாணவர்கள் படுகாயமடைந்தனர்.
தகவலறிந்து விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் படுகாயமடைந்த மாணவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related News
Popular News
TODAY'S POLL
            தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?