ஜீர்னோதாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம்..........

ஜீர்னோதாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம்..........

 திருவண்ணாமலை மாவட்டம் சேரியந்தல் கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ சித்தி விநாயகர், ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத பாலசுப்பிரமணியர், ஸ்ரீ ராஜ முனீஸ்வரர், ஸ்ரீ ஆதிபராசக்திஅம்மன்,ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயங்கள் ஜீர்னோ தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் ஆவணி மாதம் 19-ஆம் தேதி (04.09.2025 ) வியாழக்கிழமை காலை விக்னேஸ்வர பூஜை, ஸ்ரீ மாரியம்மன் பூஜை, ஸ்ரீ பாலசுப்பிரமணியர் பூஜை, ஸ்ரீ ராஜ முனீஸ்வரர் பூஜை, மஹாபூர்ணாஹீதி, கலசங்கள் வைத்து அனைத்து ஹோமங்களும், பூஜைகளும் வெகு சிறப்பாக நடைபெற்றது. மற்றும் திருவண்ணாமலை பட்டாபிராமன் ஐயர் ஜோதிடர் அவர்களால் ஸ்ரீ ஆதிபராசக்தி அம்மன், ஸ்ரீ மகா மாரியம்மன், விமான கலசங்களுக்கு பூஜை, அபிஷேகம் செய்தல்,மஹா கும்பாபிஷேகம் மற்றும் தீபாராதனையும் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு கோவில்களிலும், மின் விளக்குகளாலும், வான வேடிக்கையுடன், மங்கள வாத்தியங்கள் இசைக்க நடைபெற்றது. இலட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்கள். அன்னதானமும் வழங்கப்பட்டது. 5 கோவில்களிலும் கும்பாபிஷேகம், வண்ண மலர் மாலைகளுடன், அலங்காரங்களுடன், தீபாராதனையும் நடைபெற்றது. வெகு சிறப்பாக நடைபெற்றது. கும்பாபிஷேகத்தினை வெகு சிறப்பாக நடத்தியவர்கள் கிராம பொதுமக்கள் சேரியந்தல், கோவில் தர்மகர்த்தா M.கோவிந்தசாமி அவர்கள் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்,சேரியந்தல் வெகு சிறப்பாக நடைபெற்றது. தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%