ஜன.1 முதல் ரயில்களின் நேர அட்டவணையில் மாற்றம்

ஜன.1 முதல் ரயில்களின் நேர அட்டவணையில் மாற்றம்


 

சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் பொதிகை, சோழன் உள்பட பல விரைவு ரயில்களின் நேர அட்டவணை மாற்றப்பட்டுள்ளது.


இந்த வருடாந்திர கால அட்டவணை மாற்றம் வரும் ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு வருகிறது. மாற்றியமைக்கப்பட்ட புதிய அட்டவணை முதல்கட்டமாக தேசிய ரயில் விசாரணை அமைப்பு(NTES) செயலியில் அப்டேட் செய்யப்பட்டுள்ளது.


• சென்னை - திருநெல்வேலி நெல்லை அதிவிரைவு (12631) பழைய நேரம் இரவு 08:40, புதிய நேரம் இரவு 08:50.


• சென்னை - திருச்சி சோழன் அதிவிரைவு (22675) பழைய நேரம் காலை 07:45, புதிய நேரம் காலை 08:00.


• சென்னை - குருவாயூர் எக்ஸ்பிரஸ் (16127 ) பழைய நேரம் காலை 10:20 , புதிய நேரம் காலை 10:40.


• சென்னை - செங்கோட்டை பொதிகை அதிவிரைவு(12661) பழைய நேரம் இரவு 08:10 மணி, புதிய நேரம் இரவு 07:35.


• சென்னை - ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ்(16751) பழைய நேரம் இரவு 07:15 மணி, புதிய நேரம் இரவு 08:35.


• சென்னை - தூத்துக்குடி முத்துநகர் அதிவிரைவு(12693) பழைய நேரம் இரவு 07:30, புதிய நேரம் இரவு 07:15.


• சென்னை - மதுரை வைகை அதிவிரைவு(12635) பழைய நேரம் பிற்பகல் 01:45, புதிய நேரம் பிற்பகல் 01:15.


• சென்னை - திருநெல்வேலி வந்தே பாரத்(20665) பழைய நேரம் பிற்பகல் 02:45, புதிய நேரம் மாலை 03:05.


• சென்னை -ராமேஸ்வரம் சேது அதிவிரைவு(22661) பழைய நேரம் மாலை 05:45, புதிய நேரம் மாலை 05:55.


எனவே, பயணிகள் அனைவரும் புதிய அட்டவணை முறையை தெரிந்துகொண்டு அதற்கேற்றவாறு தங்கள் பயணத்தை தொடர்வது சிறந்தவையாகும்.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%