
சென்னை:
இதழியல் துறையில் ஆர்வம் உள்ள இளை ஞர்களை ஊக்குவிக்கும் நோக்குடன், தற்போது வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப, ஊடகக் கல்வியை வழங்குவதற்காகவும், இதழியலைத் தொழிலாக தொடங்க விரும்பும் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர் களுக்கு குறைந்த கட்டணத்தில் முதுநிலை பட்டயப் படிப்பு வழங்குவதற்காகவும் தமிழ்நாடு அரசு சார்பில் “சென்னை இதழியல் நிறுவனத்தை” தொடங்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, சென்னை இதழியல் கல்வி நிறுவனம் 2025-2026ஆம் கல்வியாண்டு முதல் சென்னையில் தொடங்குவதற்கு அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதற்காக, ரூ.775 லட்சம் ஒப்பளிப்பு செய்து அரசாணை பிறப்பிக்கப் பட்டுள்ளது. மேலும், சென்னை இதழியல் நிறுவனமா னது, நிறுவனங்கள் சட்டம், 2013 பிரிவு 8(1) இன் கீழ், பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் நிர்வாகக் குழுத் தலைவராக “தி இந்து” குழுமத்தின் இயக்குநர் மற்றும் “தி இந்து” நாளிதழின் முன்னாள் தலைமை ஆசிரியர் என்.ரவி, தலைமை இயக்குநராக “தி இந்து” நாளிதழின் முன்னாள் ஆசிரியர் ஏ.எஸ்.பன்னீர்செல்வம் நியமிக்கப்பட்டுள்ளனர்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?