சென்னையில் கடும் பனிமூட்டம்: புறநகர் ரெயில்கள் தாமதமாக இயக்கம்

சென்னையில் கடும் பனிமூட்டம்: புறநகர் ரெயில்கள் தாமதமாக இயக்கம்



 

சென்னை,


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக அதிகாலையில் பனிமூட்டம் அதிகமாக காணப்படுகிறது. இந்த பனிமூட்டம் காலை 8 மணி வரையில் நீடித்து வரும் நிலையில் சாலையில் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துடன் சென்று வருகின்றனர்.


இந்நிலையில், இன்றும் கடும் பனிமூட்டம் காணப்பட்டதால் புறநகர் மின்சார ரெயில்களின் வருகையில் தாமதம் ஏற்பட்டது. வழக்கத்தை விட கடுமையான பனிமூட்டம் காரணமாக சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பனிமூட்டம் அதிக அளவில் நிலவுவதால் புறநகர் மின்சார ரெயில்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன.


திருவள்ளூர், திருத்தணி, அரக்கோணம், கடம்பத்தூர், கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சென்னை சென்ட்ரல் வரக்கூடிய புறநகர் மின்சார ரெயில்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன. இதன் காரணமாக காலையில் வேலைக்கு செல்லும் மக்கள் சிரமத்தை எதிர்கொண்டு உள்ளனர்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%