சென்னை, செப். 26–
சென்னையில் அரசியல் ரீதியாக நான் யாரையும் சந்திக்கவில்லை என்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
அண்ணா திமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒருங்கிணைக்க வேண்டும் என பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கெடு விதித்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் கட்சி பதவிகள் பறிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பாக, கோபிசெட்டிப்பாளையத்தில் உள்ள தன் இல்லத்தில், செங்கோட்டையன் தொடர் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். இதனிடையே சென்னையில் டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து பேசியதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் செங்கோட்டையன் ஈரோட்டில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
யாரையும் அரசியல் ரீதியாக சந்திக்கவில்லை; வேண்டுமென்றே வதந்தி பரப்புகின்றனர். ஓ.பன்னீர்செல்வத்துடன் சந்திப்பு என வதந்தி பரப்புகின்றனர். மனைவி மருத்துவமனையில் இருப்பதால்தான் சென்னைக்கு சென்றேன். வதந்திகளுக்கு நான் பதில் சொல்ல முடியாது. அ.தி.மு.க.வில் பிரிந்திருக்கும் சக்திகள் ஒருங்கிணைய வேண்டும் என்பதற்காக பேசி வருகிறேன்.
எனக்கு அவப்பெயர் வர வேண்டும் என திட்டமிட்டு செய்கின்றனர்; இது வேதனையளிக்கிறது. யார் வதந்தி பரப்புவது என சொல்ல முடியாது; அவர்களே நிறுத்திக் கொள்ள வேண்டும். இதுபோன்ற வதந்திகளுக்கு தெளிவான பதிலை கூறி விட்டேன்; உறுப்பினர்கள் யாரையும் சந்திக்கவில்லை. எனது நோக்கம் அதிமுக ஆட்சி அமைய வேண்டும் என்பதுதான்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?