சீர்காழி விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் சார்பில் 5 ஆயிரம் மஞ்சள் துணி பைகள் இலவசமாக வழங்கல்
Oct 21 2025
36
சீர்காழி , அக் , 22 -
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகர வர்த்தகர்கள் சங்கம் மற்றும் சீர்காழி விவேகானந்தா கல்வி நிறுவனங்கள்இணைந்து நடத்திய பொது மக்களுக்கு இலவச மஞ்சள் துணி பை வழங்கும் விழா சீர்காழியில் நடைப்பெற்றது.
விழாவிற்கு சீர்காழி நகர வர்த்தகர்கள் சங்க தலைவர் சுடர் எஸ். கல்யாணசுந்தரம் தலைமை வகித்தார் .
சிறப்பு அழைப்பாளராக சீர்காழி காவல் ஆய்வாளர் கமல்ராஜ் கலந்து கொண்டார்.
பொதுமக்களுக்கு விலையில்லா மஞ்சள் துணி பையை விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் தாளாளர் கே.வி.ராதாகிருஷ்ணன் வழங்கினார்.
சீர்காழி விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் சார்பில் 5 ஆயிரம் மஞ்சள் துணி பைகள் இலவசமாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நகர வர்த்தகர்கள் சங்க பொது செயலாளர் சுசீந்திரன் நன்றி கூறினார்.
கடைக்குச் செல்லும் போது அனைவரும் துணி பை கொண்டு செல்லவும்
பிளாஸ்ட்டிக்கை தவிர்ப்போம் புற்றுநோயை ஒழிப்போம் என்ற கருத்து விழாவில் வலியுறுத்தப்பட்டது.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?