news Breaking News
clock

சீர்காழி தென்பாதி அங்காள பரமேஸ்வரி கோயிலில் மகா சிவராத்திரி விழா கொடியேற்றம்

சீர்காழி தென்பாதி அங்காள பரமேஸ்வரி கோயிலில் மகா சிவராத்திரி விழா கொடியேற்றம்



சீர்காழி , பிப் , 11 - 

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகரம் தென்பாதி தாலுக்கா அலுவலகம் எதிரில் நீதிமன்ற சாலையில் பரம்பரை தனியார் ஆலயமாகவும் புராதனமாயும் விளங்குகின்ற ராஜராஜேஸ்வரி என்கின்ற அருள்மிகு அங்காள பரமேஸ்வரி அம்மையின் மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு விக்கேஸ்வரர் பூஜையுடன் 10 -ம் தேதி மதியம் கொடியேற்றம் நடைப்பெற்றது. இந்த விழாவில் பக்தர்கள் அலகு காவடி எடுத்து ஊர்வலமாக வந்தனர். அபிஷேக ஆராதனை நடைப்பெற்று அன்னதானம் வழங்கப்பட்டது. 

11-ம் தேதி பாவாடை ராயன் பூஜை , 12-ம் தேதி அகோர வீர புத்திர் மயான ருத்ரர் பூஜை , பரிவார தேவதைகள் விழா , 13-ம் தேதி அஷ்டலட்சுமி பூஜை , 14-ம் தேதி சிவசக்தி திருக்கல்யாணம் , திருவிளக்கு பூஜை நடை பெற உள்ளது. தினமும் இரவில் அம்பாள் வீதியுலா நடைபெறும். வரும் 15-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மகா சிவராத்திரி விழாவையொட்டி காலையில் காவடி ஊர்வலம் , பகலில் அபிஷேக ஆராதனை, மாலையில் மாவிளக்கு ஏற்றுதல் , இரவு அம்பாள் யாளி வாகனத்தில் அமர்ந்து பேச்சி ரூபம் எனும் ஆகம வேஷத்துடன் அக்னி கொப்பரை கரகம் முதலானதுடன் முக்கிய வீதி வழி சென்று சீர்காழி நகர மயானம் அடைந்து திருவிளையாடல் முடிந்து மறுநாள் அதிகாலை ஆலயம் திரும்புதல் நிகழ்ச்சி நடை பெற உள்ளது.

16-ம் தேதி திங்கள்கிழமை சந்தன குட விழா , மாலையில் அம்பாளின் துவாரபாலகிகளான காளிகள் சகிதம் உப்பனாற்றங்கரையிலிருந்து சந்தனம் , பால் ,

 பன்னீர் குடங்களை பக்தர்கள் சுமந்து ஊர்வலமாக எடுத்து வந்து அம்பாளுக்கு அபிஷேகம் செய்து ஆசி பெறுதல், 17-ம் தேதி சர்ப்ப நாயகி அம்மன் பூஜை , 18-ம் தேதி கும்ப பூஜை , 19-ம் தேதி விடையாற்றி கஞ்சி வார்த்தல் , கொடி இறக்குதல் , ஊஞ்சல் உற்சவம் , அம்பாள் எதாஸ்தானம் அமருதல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை ஆலய உரிமை மற்றும் பரம்பரை டிரஸ்டி ஸ்தானீகம் எம்.ஆர் ஜீவானந்தம் செய்து வருகிறார்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News