சீர்காழியில் அன்பின் வார்த்தைகள் திருச்சபை சார்பில் கிறிஸ்துமஸ் ஊர்வலம் மற்றும் பெருவிழா

சீர்காழியில் அன்பின் வார்த்தைகள் திருச்சபை சார்பில் கிறிஸ்துமஸ் ஊர்வலம் மற்றும் பெருவிழா



சீர்காழி , டிச , 26 -

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி புதிய பேருந்து நிலையத்திலிருந்து திட்டை ரோட்டில் உள்ள

அன்பின் வார்த்தை திருச்சபை வரை கிறிஸ்துமஸ் திருவிழா ஊர்வலம் நடைப்பெற்றது 

அன்பின் வார்த்தை ஊழியங்கள்

ஏஜசிசிசி மண்டல தலைவர் திருவெண்காடு எட்வின் வில்லியம் பேரணியை ஜெபித்து ஆசீர்வதித்தார். 

அஇஅதிமுக மயிலாடுதுறை மாவட்ட கழக அவை தலைவர் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் பி.வி.பாரதி பேரணியை கொடி அசைத்து துவக்கி வைத்தார். அதிமுக சீர்காழி கிழக்கு ஒன்றிய செயலாளர் 

ஏ.கே.சந்திரசேகரன், மேற்கு ஒன்றிய செயலாளர் ஆதமங்கலம் கே.ரவிச்சந்திரன், மயிலாடுதுறை மாவட்ட விசிக செயலாளர் தாமு இனியவன், சீர்காழி நேஷனல் ரெடிமேட்ஸ் முகமத் ஐயூப் அன்சாரி , தில்லைவிடங்கள் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் எஸ். இளங்கோவன், ஜெஜெ எர்த் மூவ் அன் பில்டர்ஸ் ஜெ.ஜெயகுமார், விசிக ஒன்றிய செயலாளர் ஆசைதம்பி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள். கிறிஸ்துமஸ் தேவ செய்தியை வாம் நிறுவனர் இயக்குனர் சதீஷ் வாசித்தார். ஏழை , எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவியாக போர்வைகள், புடவைகள் வழங்கப்பட்டது.

இரவு ஏவியூ சிறுவர்கள் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. 

கிறிஸ்துமஸ் ஊர்வலத்திலும், கிறிஸ்துமஸ் பெருவிழாவிலும் திரளாக பலர் கலந்து கொண்டு  

விழாவினை சிறப்பித்து கொண்டாடினார்கள். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் கேக் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை   வில்சன்செல்வக்குமார்திருச்சபை கமிட்டி , நல்லசமாரியன் வாலிபர் இயக்கம், ரூத் பெண்கள் ஐக்கியம் , அன்பின் வார்த்தை ஊழியங்கள் ஆகிய அமைப்பினர் செய்தார்கள்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%