சீக்கியர் அல்லாத 14 பேருக்கு பாகிஸ்தான் அனுமதி மறுப்பு

சீக்கியர் அல்லாத 14 பேருக்கு பாகிஸ்தான் அனுமதி மறுப்பு



புதுடெல்லி: சீக்​கிய மதத்தை நிறு​விய குரு​நானக் தேவ் பிறந்த இடமான நான்​கானா சாகிப், பாகிஸ்​தானின் பஞ்​சாப் மாநிலத்​தில் உள்​ளது.


குரு​நானக் ஜெயந்​தியை முன்​னிட்டு சுமார் 2,100 பக்​தர்​கள் பாகிஸ்​தான் செல்ல மத்​திய உள்​துறை அமைச்​சகம் அனு​மதி வழங்​கி​யிருந்​தது. இவர்​கள் அனை​வருக்​கும் பாகிஸ்​தான் அரசு பயண ஆவணங்​களை வழங்​கியது. இவர்​களில் 1,900 பேர் நேற்று வாகா எல்லை வழி​யாக பாகிஸ்​தான் சென்​றனர்.


கடந்த மே மாதம் ஆபரேஷன் சிந்​தூர், ராணுவ மோதலுக்கு பிறகு இரு நாடு​கள் இடையே முதல் மக்​கள் தொடர்பு நடவடிக்கை இது​வாகும். இந்​நிலை​யில் அனு​மதி வழங்​கப்​பட்​ட​வர்​களில் 14 பேர் சீக்​கியர்​கள் அல்ல என்​ப​தால் அவர்​களை பாகிஸ்​தான் திருப்பி அனுப்​பி​விட்​டது.


இது தவிர, தனி​யாக விசாக்​களுக்கு விண்​ணப்​பித்த சுமார் 300 பேருக்கு உள்​துறை அமைச்​சகத்​தின் ஒப்​புதல் இல்​லாத​தால் அவர்​களை​யும் பாகிஸ்​தான் திருப்​பி அனுப்​பிவிட்​டது.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%