
தென்கிழக்கு ஆசிய நாடுகளான கம்போடியா- தாய்லாந்து இடையே மோதல் ஏற்பட்டு அது போர் பதற்றமாக மாறியுள்ளது. இரு நாடுகளுக்கு இடையே சண்டை தீவிரமடைந்துள்ளதால் தாய்லாந்தில் அவசரநிலை பிரகடன செய்யப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்குமிடையே புராதன சிவன் கோயில் உரிமை குறித்த விவகாரத்தால் ஏற்பட்ட மோதல், இரு நாட்டு ராணுவங்களுக்கு இடையிலான சண்டையாக மாறியதில் இதுவரை 32 பேர் உயிரிழந்துள்ளனர்.
தாய்லாந்தில் சர்வதேச எல்லையையொட்டி அமைந்துள்ள 8 மாகாணங்களில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இந்த இரு நாடுகளும் 817 கிமீ தூர எல்லையை பகிர்ந்து கொள்கின்றனர். இதில் பண்டைய சிவன் கோயில் தான் இரு நாடுகளுக்கு இடையேயான போரில் முக்கிய பிரச்சனைக்கு உரிய இடங்களாக மாறியுள்ளன. அது தான் கம்போடியா - தாய்லாந்து எல்லையில் உள்ள ப்ரே விஹார் கோயில். இது சர்வதேச அமைப்பான யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட பாரம்பரிய சின்னம்.
1907ம் ஆண்டு முதலே இந்த எல்லை பிரச்சனையானது இரு நாடுகளுக்கு இடையே தொடர்ந்து வருகிறது. 11ம் நூற்றாண்டில் மன்னன் யசேவர்மன் என்பவரால் இந்த சிவன் கோயில் ஆனது கட்டப்பட்டது. பிற்காலத்தில் இது புத்த மத தலமாகவும், அதன் சடங்குகள் கடைப்பிடிக்கும் இடமாகவும் மாறியது. எனவே, இந்த கோயிலில் இந்து, புத்த மதத்தினர் இருவருமே வழிபாடு மேற்கொள்வது வழக்கம்.
இந்த கோயில் தங்களுக்கு சொந்தமானது அதை தாய்லாந்து ஆக்கிரமித்துள்ளது என்பதே கம்போடியாவின் புகார். இந்த விவகராம் 1962ம் ஆண்டில் சர்வதேச நீதிமன்றம் வரை சென்றது. இடத்தை கம்போடியா வசம் ஒப்படைக்க தீர்ப்பு வழங்கியது சர்வதேச நீதிமன்றம். ஆனால், அதை ஏற்க மறுத்து தாய்லாந்து தொடர்ந்து சச்சரவு செய்து வருகிறது.
சமீபத்தில் எல்லையில் கண்ணிவெடி வெடிப்பில் தாய்லாந்து நாட்டு ராணுவ வீரர் ஒருவர் காயமடைந்தார். இதைத் தொடர்ந்து இரு நாடுகள் இடையே மோதல் தொடங்கி பதற்றம் அதிகரித்துள்ளது. இந்த மோதலால் எல்லைப் பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த போர் பதற்றத்தை இரு நாடுகளும் தவிர்க்க வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தொடங்கி சர்வதேச சமூகத்தினர் பலர் வலியுறுத்தி வருகின்றனர்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?